கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றுக்கான சூப்பர் சிக்ஸ்:வெஸ்ட் இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் இன்று மோதல் + "||" + Super Six for World Cup Cricket Qualification: West Indies-Afghanistan Today clash

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றுக்கான சூப்பர் சிக்ஸ்:வெஸ்ட் இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றுக்கான சூப்பர் சிக்ஸ்:வெஸ்ட் இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றுக்கான சூப்பர் சிக்ஸ் பிரிவில் வெஸ்ட் இண்டீஸ்- ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
ஹராரே,

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றுக்கான சூப்பர் சிக்ஸ் பிரிவில் வெஸ்ட் இண்டீஸ்- ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

உலக கிரிக்கெட் தகுதி சுற்று

10 அணிகள் பங்கேற்றுள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரு அணிகள் மட்டும் 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெறும். லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் நுழைந்துள்ளன.

சூப்பர் சிக்ஸ் சுற்றை பொறுத்தமட்டில் ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் சந்திக்காத மற்ற மூன்று அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதே சமயம் லீக்கில் தங்களால் வீழ்த்தப்பட்ட அணி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு வந்திருந்தால் அதற்குரிய புள்ளியையும் எடுத்து வர முடியும். இதன்படி ‘ஏ’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகத்தை தோற்கடித்து இருந்ததால் அதற்குரிய 4 புள்ளிகளை பெற்று இருக்கிறது. ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே தலா 3 புள்ளிகளை பெற்றுள்ளன.

வளர்ந்து வரும் அணிகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான், ஒரே ஒரு வெற்றியுடன் அதிர்ஷ்டகரமாக சூப்பர் சிக்ஸ் சுற்றை எட்டியது. எந்த ஒரு புள்ளியையும் கொண்டு வராத அந்த அணி, சூப்பர் சிக்ஸ் சுற்றில் தங்களது மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டியை பற்றி கொஞ்சமாவது நினைத்து பார்க்க முடியும்.

சூப்பர் சிக்ஸ் ஆட்டம்

இந்த நிலையில் சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆப்கானிஸ்தானை ஹராரே நகரில் இன்று எதிர்கொள்கிறது. வலுவான அணியாக கருதப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டும் கிளிக் ஆகாததால் லீக் பரிவில் தள்ளாடிவிட்டது. இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் தவிக்கும் அந்த அணி கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ், ஜாசன் ஹோல்டர், பிராத்வெய்ட், சாமுவேல்ஸ் போன்ற அதிரடி சூரர்களை உள்ளடக்கிய வெஸ்ட் இண்டீசை சமாளிக்குமா? என்பது கேள்விக்குறி தான். இவ்விரு அணிகளும் இதுவரை 3 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி கண்டன. மற்றொரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.

புலவாயோவில் நடக்கும் மற்றொரு சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து- ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதுகின்றன. இரண்டு ஆட்டங் களும் இந்திய நேரப்படி பகல் 1 மணிக்கு தொடங்கும்.

ஆசிரியரின் தேர்வுகள்...