கிரிக்கெட்

மேற்கு வங்க பத்தாம் வகுப்பு தேர்வில் விராட் கோலி பற்றிய வினாக்கள் கேட்பு + "||" + Question on Virat Kohli in Class X board exam in West Bengal

மேற்கு வங்க பத்தாம் வகுப்பு தேர்வில் விராட் கோலி பற்றிய வினாக்கள் கேட்பு

மேற்கு வங்க பத்தாம் வகுப்பு தேர்வில் விராட் கோலி பற்றிய வினாக்கள் கேட்பு
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் விராட் கோலி பற்றிய வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. #ViratKohli
கொல்கத்தா, 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பற்றிய வினா மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற்ற  பத்தாம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்டுள்ளது.  கீழ்வரும் விவரங்களைக் கொண்டு விராட் கோலி பற்றி 100 வார்த்தைகளுக்கு மிகாமல் வாழ்க்கை வரலாறு வரைக என்று வினாத்தாளில் ஒரு கேள்வி இருந்தது.

இது குறித்து மாணவி ஷ்ரேயஸ் கோஷல் என்பவர் ஆங்கில ஊடகத்துக்கு தெரிவிக்கும் போது, “10 மார்க்குகளுக்கான விடையளிக்க வேண்டிய கட்டாய வினாவாகும் இது” என்றார். திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லஷ்மி ரத்தன் சுக்லா இந்த விவகாரம் குறித்து கூறும்போது, “கோலியின் வாழ்க்கை அர்ப்பணிப்பு, கட்டுக்கோப்பு, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவை கொண்டது. இவை மாணவர்களுக்கு ஓர் உதாரணமாகத் திகழும்” என்றார்.