கிரிக்கெட்

ஸ்டீவன் சுமித்தை சாடினாரா பிலாண்டர்? + "||" + Steven Summit Satinara Fillander?

ஸ்டீவன் சுமித்தை சாடினாரா பிலாண்டர்?

ஸ்டீவன் சுமித்தை சாடினாரா பிலாண்டர்?
பிலாண்டரின் புகார் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
கேப்டவுன்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெரோன் பிலாண்டரின் டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்ட ஒரு பதிவில், ‘போர்ட் எலிசபெத் டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், எங்களது பவுலர் காஜிசோ ரபடா இடையிலான மோதல் தொடர்பான வீடியோ காட்சியை நான் முழுமையாக பார்க்கவில்லை. ஆனால் எனக்கு தெரிந்த வரை, தன்னை இடிக்க வேண்டும் என்பதற்காக ஸ்டீவன்சுமித் தோள்பகுதியை ரபடாவின் அருகில் கொண்டு சென்றுள்ளார். சுமித் நினைத்திருந்தால் உடல்ரீதியாக உரசுவதை தவிர்த்து இருக்கலாம். இந்த விவகாரத்தில் ரபடா குற்றவாளி (2 டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது) என்றால் என்னை பொறுத்தவரை சுமித்தும் குற்றவாளி தான்’ என்று அதில் கூறப்பட்டு இருந்தது. பிலாண்டரின் புகார் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அடுத்த சில மணி நேரத்தில் இதை தான் வெளியிடவில்லை என்று பிலாண்டர் மறுப்பு தெரிவித்தார். தனது டுவிட்டர் பக்கத்தில் மர்ம நபர் யாரோ ஊடுருவி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். நான் அது போன்று எதுவும் பதிவிடவில்லை. இதற்காக வருந்துகிறேன் என்று கூறியுள்ளார்.