கிரிக்கெட்

சுனில் நரின் பந்து வீச்சில் மீண்டும் சர்ச்சை + "||" + Sunil Narine's bowling controversy

சுனில் நரின் பந்து வீச்சில் மீண்டும் சர்ச்சை

சுனில் நரின் பந்து வீச்சில் மீண்டும் சர்ச்சை
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரின் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் போட்டியில் லாகூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

சார்ஜா,

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரின் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் போட்டியில் லாகூர் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 14–ந் தேதி நடந்த குயட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லாகூர் அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய சுனில் நரின் பந்து வீச்சு குறித்து நடுவர்கள் சந்தேகம் கிளப்பி இருக்கிறார்கள். போட்டி நடுவர்களின் புகார் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துக்கு அறிக்கை அனுப்ப இருக்கிறது. இருப்பினும் அவர் இந்த போட்டி தொடரில் விளையாட தடை எதுவும் விதிக்கப்படவில்லை. மீண்டும் இதே புகாருக்கு சுனில் நரின் உள்ளானால் தடையை சந்திக்க நேரிடும். இந்த பிரச்சினையால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கும் சுனில் நரின் ஐ.பி.எல். போட்டியில் இந்த சீசனில் விளையாடுவதில் பிரச்சினை ஏற்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பந்து வீச்சு சர்ச்சையில் சுனில் நரின் சிக்குவது இது 4–வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.