கிரிக்கெட்

இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நவம்பர் மாதம் நடக்கிறது + "||" + India-West Indies crash 20 Over cricket match

இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நவம்பர் மாதம் நடக்கிறது

இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நவம்பர் மாதம் நடக்கிறது
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் போட்டி அட்டவணை நிர்ணய கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் போட்டி அட்டவணை நிர்ணய கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் வருங்காலத்தில் இந்தியாவில் நடைபெற இருக்கும் போட்டிகளின் அட்டவணை பட்டியல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆண்டில் இந்திய அணி உள்ளூரில் 3 டெஸ்ட் போட்டியில் தான் விளையாடுகிறது. ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்டில் இந்தியாவுடன் மோதும் ஆட்டம் பெங்களூருவில் ஜூன் மாதம் நடக்கிறது. இதனை அடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி, அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்திலும், 2–வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டிலும் நடைபெறுகிறது. இதில் ஏதாவது ஒரு டெஸ்ட் போட்டி பகல்–இரவு ஆட்டமாக நடைபெறும். இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி மும்பை, கவுகாத்தி, கொச்சி, இந்தூர், புனேயிலும், 20 ஓவர் போட்டி கொல்கத்தா, சென்னை, கான்பூரிலும் நடைபெறுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி கொல்கத்தாவில் நவம்பர் 4–ந் தேதி நடக்கிறது. எஞ்சிய போட்டிகளுக்கான தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதனை அடுத்து இந்த ஆண்டு கடைசியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் 2 மாதம் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு (2019) ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் இந்தியா வந்து 5 ஒருநாள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் மொகாலி (பிப்ரவரி 24–ந் தேதி), ஐதராபாத் (27–ந் தேதி), நாக்பூர் (மார்ச் 2–ந் தேதி), டெல்லி (5–ந் தேதி), ராஞ்சி (8–ந் தேதி) ஆகிய நகரங்களிலும், 20 ஓவர் போட்டி தொடர் பெங்களூரு (மார்ச் 10–ந் தேதி), விசாகப்பட்டினம் (13–ந் தேதி) ஆகிய இடங்களிலும் நடக்கிறது.


ஆசிரியரின் தேர்வுகள்...