‘இந்தியாவில் விளையாடியதை மறக்க முடியாது’ ஜான்டிரோட்ஸ் மாமல்லபுரத்தில் பேட்டி


‘இந்தியாவில் விளையாடியதை மறக்க முடியாது’ ஜான்டிரோட்ஸ் மாமல்லபுரத்தில் பேட்டி
x
தினத்தந்தி 18 March 2018 8:45 PM GMT (Updated: 18 March 2018 8:42 PM GMT)

முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் மாமல்லபுரத்துக்கு தன் நாட்டு நண்பர்கள் சிலருடன் அலைசறுக்கு பயிற்சி அளிக்க வந்திருந்தார்.

மாமல்லபுரம்,

தலைச்சிறந்த பீல்டர்களில் ஒருவரான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் மாமல்லபுரத்துக்கு தன் நாட்டு நண்பர்கள் சிலருடன் அலைசறுக்கு பயிற்சி அளிக்க வந்திருந்தார். கடற்கரையில் உள்ள தனியார் அலைசறுக்கு பயிற்சி கூடத்தை திறந்து வைத்து பார்வையிட்ட அவர் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:–

நான் பல்வேறு நாட்டில் கிரிக்கெட் விளையாடி இருந்தாலும் இந்தியாவில் விளையாடியதை என்னால் மறக்க முடியாது. இந்திய ரசிகர்கள் கிரிக்கெட்டை அதிகம் நேசிப்பவர்கள் ஆவர்.

இந்திய அணியில் தற்போது சிறந்த வீரர்கள் உருவாகி வருகின்றனர். விராட் கோலி சிறந்த வீரராக திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். ஐ.பி.எல்., டி.என்.பி.எல். போன்ற 20 ஓவர் போட்டிகள் பிரபலமாகி இருக்கிறது. கிரிக்கெட்டை போல அலைசறுக்கு (சர்பிங்) போட்டியும் உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது.

இவ்வாறு ஜான்டிரோட்ஸ் கூறினார்.


Next Story