கிரிக்கெட்

இரானி கோப்பை கிரிக்கெட்டில் பட்டம் வென்றது, விதர்பா + "||" + Irani Cup cricket Won the title, Vidarbha

இரானி கோப்பை கிரிக்கெட்டில் பட்டம் வென்றது, விதர்பா

இரானி கோப்பை கிரிக்கெட்டில் பட்டம் வென்றது, விதர்பா
ரஞ்சி கிரிக்கெட் சாம்பியன் விதர்பா – ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 14–ந்தேதி மராட்டிய மாநிலம் நாக்பூரில் தொடங்கியது.

நாக்பூர்,

ரஞ்சி கிரிக்கெட் சாம்பியன் விதர்பா – ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 14–ந்தேதி மராட்டிய மாநிலம் நாக்பூரில் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த விதர்பா அணி 7 விக்கெட் இழப்புக்கு 800 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. மூத்த வீரர் வாசிம் ஜாபர் 286 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 4–வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 390 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹனுமா விஹாரி 183 ரன்கள் எடுத்தார். பின்னர் 410 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய விதர்பா அணி 26 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்திருந்த போது, ஆட்டம் ‘டிரா’வில் முடித்துக் கொள்ளப்பட்டது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் விதர்பா அணி சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கியது.