கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் ஜிம்பாப்வே தோல்வி + "||" + World Cup qualifying round: Zimbabwe defeat to West Indies

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் ஜிம்பாப்வே தோல்வி

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் ஜிம்பாப்வே தோல்வி
உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றுப் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் ஜிம்பாப்வே தோல்வி அடைந்தது.
ஹராரே,

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் நேற்று நடந்த சூப்பர் சிக்ஸ் ஆட்டம் ஒன்றில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் தோல்வி கண்டது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டம் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் ஹராரேவில் நேற்று நடந்த சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டம் ஒன்றில் வெஸ்ட்இண்டீஸ்- ஜிம்பாப்வே அணிகள் மோதின.


‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 289 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக பிரன்டன் டெய்லர் 138 ரன்னும் (124 பந்துகளில் 20 பவுண்டரி, 2 சிக்சருடன்) சாலோமன் மிர் 45 ரன்னும், சீன் வில்லியம்ஸ் 34 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் ஜாசன் ஹோல்டர் 4 விக்கெட்டும், கெமர் ரோச் 3 விக்கெட்டும், கீமோ பால் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 17 ரன்னில் (13 பந்துகளில் 2 சிக்சருடன்) ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து தொடக்க ஆட்டக்காரர் இவின் லீவிஸ் (64 ரன்கள்) மற்றும் அவருடன் இணைந்த ஷாய் ஹோப் (76 ரன்கள்), சாமுவேல்ஸ் (86 ரன்கள்) ஆகியோர் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப் பாதையில் பயணிக்க வைத்தனர்.

49 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோவ்மன் பவெல் 15 ரன்னுடனும், ஆஷ்லே நர்ஸ் 8 ரன்னுடனும் களத்தில் நின்றனர். இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.