கிரிக்கெட்

தோல்விக்காக மன்னிப்பு கோரினார் - ருபெல் ஹூசைன் + "||" + Rubel Hussein apologized for the failure of the match against the Indian team in the final.

தோல்விக்காக மன்னிப்பு கோரினார் - ருபெல் ஹூசைன்

தோல்விக்காக மன்னிப்பு கோரினார் - ருபெல் ஹூசைன்
இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சந்தித்த தோல்விக்காக ருபெல் ஹூசைன் மன்னிப்பு கோரினார்.
முத்தரப்பு கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் ருபெல் ஹூசைன் 19-வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 22 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதுவே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தோல்விக்காக ருபெல் ஹூசைன் தங்கள் நாட்டு ரசிகர்களிடம் மன்னிப்பு கோரி இருக்கிறார். இது குறித்து ருபெல் ஹூசைன் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த தோல்வியை கொடுமையானதாக நான் உணருகிறேன். வங்காளதேச அணியின் தோல்விக்கு நான் காரணமாக இருப்பேன் என்று ஒருபோதும் நினைத்து பார்த்ததில்லை. இறுதிப்போட்டியில் வெற்றியை மிகவும் அருகில் நெருங்கி வந்தோம். எனது பந்து வீச்சால் நாங்கள் தோல்வியை சந்தித்தோம். இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதனை மறந்து விடும்படி வேண்டுகிறேன்’ என்றார்.