கிரிக்கெட்

ரசிகர்கள் மற்றும் வீரர்கள் பாராட்டு மழையில் தினேஷ் கார்த்திக் + "||" + Dinesh Karthik in the praise of fans and players

ரசிகர்கள் மற்றும் வீரர்கள் பாராட்டு மழையில் தினேஷ் கார்த்திக்

ரசிகர்கள் மற்றும் வீரர்கள் பாராட்டு மழையில் தினேஷ் கார்த்திக்
இந்திய அணியின் முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் என பலரும் தினேஷ் கார்த்திக்கை வெகுவாக பாராட்டினர்.
முத்தரப்பு கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றதுடன், என்ன நடக்குமோ? என்று ஏங்கி தவித்த இந்திய ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்தார். வெற்றி பெற்று விடலாம் என்று மிகவும் எதிர்பார்ப்புடன் காத்து இருந்த வங்காளதேச அணியின் ரசிகர்கள் நொடிப்பொழுதில் ஏமாற்றம் அடைந்து நொந்து போனார்கள். தோல்வியின் விளிம்பில் இருந்து அணியை மீட்டு வெற்றி வாகை சூட வைத்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை இந்திய அணியின் முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் பாராட்டி வருகிறார்கள்.


இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தனது பாராட்டு பதிவில், ‘என்ன மாதிரியான கிரிக்கெட் ஆட்டம் இது. அணியின் ஒட்டுமொத்த செயல்பாடும் பாராட்டுக்குரியது. தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் அருமையானது’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தெண்டுல்கர் தனது பதிவில், ‘இந்திய அணியின் வெற்றி அற்புதமானது. தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங் சூப்பர். ரோகித் சர்மா அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தார்’ என்று தெரிவித்துள்ளார்.

யுவராஜ்சிங், வி.வி.எஸ்.லட்சுமண், ஆர்.அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, விருத்திமான் சஹா, வினய்குமார், யூசுப் பதான், முகமது கைப் உள்பட பலர் தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங்கை வெகுவாக புகழ்ந்துள்ளனர்.