கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று:அமீரகத்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் + "||" + World Cup Cricket Qualification round: Beat Emirates Afghanistan

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று:அமீரகத்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று:அமீரகத்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் ஐக்கிய அரபு அமீரகத்தை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் அணி இறுதிசுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.
ஹராரே,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் ஐக்கிய அரபு அமீரகத்தை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் அணி இறுதிசுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.

தகுதி சுற்று

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரு அணிகள் மட்டும் 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

இந்த தகுதி சுற்றில் தற்போது லீக் முடிந்து சூப்பர் சிக்ஸ் சுற்று நடந்து வருகிறது. இதில் நேற்று ஹராரே நகரில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த அமீரக அணி 43 ஓவர்களில் 177 ரன்னில் சுருண்டது. ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 41 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் ரஷித்கானின் விக்கெட் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்தது. இன்னும் 9 ஆட்டத்திற்குள் அவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினால், ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்கள் வீழ்த்தி சாதனையை படைப்பார்.

ஆப்கானிஸ்தான் வெற்றி

அடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 54 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இதன் பின்னர் குல்படின் நயிப், நஜிபுல்லா ஜட்ரன் ஆகியோர் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றி வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

ஆப்கானிஸ்தான் அணி 34.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குல்படின் நயிப் 74 ரன்களுடனும், நஜிபுல்லா ஜட்ரன் 63 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்கும் ஆப்கானிஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் அயர்லாந்தை நாளை மறுதினம் எதிர்கொள்கிறது.

சூப்பர் சிக்ஸ் சுற்றில் 3 ஆட்டங்களே எஞ்சியுள்ளன. ஆனால் இறுதிப்போட்டியில் விளையாடப்போகும் இரு அணிகள் எவை என்பது இதுவரை உறுதியாகவில்லை.

இன்றைய ஆட்டம்

இன்று (புதன்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்காட்லாந்துடன் மோதுகிறது. இதில் ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றால் சிக்கலின்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து விடும். மாறாக தோற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.

வெஸ்ட் இண்டீஸ் அணி லீக் சுற்றில் இருந்து 4 புள்ளிகளை எடுத்து வந்ததால் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியரின் தேர்வுகள்...