கிரிக்கெட்

இங்கிலாந்து-நியூசிலாந்து மோதும் பகல்-இரவு டெஸ்ட் இன்று தொடக்கம் + "||" + England-New Zealand crunch day-night Test starts today

இங்கிலாந்து-நியூசிலாந்து மோதும் பகல்-இரவு டெஸ்ட் இன்று தொடக்கம்

இங்கிலாந்து-நியூசிலாந்து மோதும் பகல்-இரவு டெஸ்ட் இன்று தொடக்கம்
இங்கிலாந்து-நியூசிலாந்து மோதும் பகல்-இரவு டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
ஆக்லாந்து,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்குகிறது. இது பகல்-இரவு டெஸ்ட் போட்டியாகும். மின்னொளியின் கீழ் விளையாடப்படுவதால் இளஞ்சிவப்பு நிறப்பந்து (பிங்க்) பயன்படுத்தப்படும். நியூசிலாந்தில் பகல்-இரவு டெஸ்ட் அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும்.


இங்கிலாந்து அணி கடைசியாக ஆடிய 11 வெளிநாட்டு டெஸ்டுகளில் ஒன்றில் கூட ஜெயிக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் 0-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி இந்த தொடரின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்ப முயற்சிக்கும்.

நியூசிலாந்து அணியில், தொடையில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்த முன்னணி பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் உடல்தகுதி பெற்று விட்டார். அவரது வருகை நியூசிலாந்தின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும். சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி, இங்கிலாந்துடன் இதுவரை 18 டெஸ்ட் தொடர்களில் விளையாடி இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு தொடரை (1984-ம் ஆண்டு) மட்டுமே நியூசிலாந்து கைப்பற்றி இருக்கிறது. அந்த மோசமான வரலாற்றை மாற்றும் முனைப்புடன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி வியூகங்களை வகுத்துள்ளது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி 4–வது முறையாக ‘சாம்பியன்’ இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை பந்தாடியது
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்தாடி மகுடம் சூடியது.
2. இலங்கைக்கு எதிரான 3–வது டெஸ்ட்: வெற்றிப்பாதையில் இங்கிலாந்து
இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.
3. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இலங்கை 240 ரன்னில் ஆல்–அவுட்
இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.
4. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியிடம் தோல்வி கண்டு இந்தியா வெளியேறியது
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியது.
5. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி 312 ரன்கள் குவிப்பு பேர்ஸ்டோ சதம் அடித்தார்
இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது.