கிரிக்கெட்

முத்தரப்பு பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல் + "||" + 20 World Cup: India-Australia Today Confrontation

முத்தரப்பு பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்

முத்தரப்பு பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்
முத்தரப்பு பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோத உள்ளது.
மும்பை,

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று (காலை 10 மணி) நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, மெக் லேனிங் தலைமையிலான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. சமீபத்தில் ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்த இந்திய அணி அதற்கு பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

போட்டிக்கான இந்திய அணி வருமாறு:- ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), மந்தனா, மிதாலிராஜ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனுஜா பட்டீல், தீப்தி ஷர்மா, தனியா பாட்டியா, பூனம் யாதவ், ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பான்டே, பூஜா வஸ்ட்ராகர், ரும்லி தார், மோனா மேஷ்ரம், ராஜேஷ்வரி கெய்க்வாட்.


தொடர்புடைய செய்திகள்

1. சோயப் மாலிக்கை மாமா என்றழைக்கும் இந்திய ரசிகர்கள்! சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை மாமா என இந்திய ரசிகர்கள் உரிமையோடு அழைக்கும் வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
2. இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன்? இம்ரானுக்கு பாக். எதிர்க்கட்சிகள் கண்டனம்
இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன்? என இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
3. இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு
ரஷ்யாவிடம் போர் விமானம் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ள இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
4. இந்தியா- பாக். வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்தித்து பேச இருப்பது சிறப்பான செய்தி: அமெரிக்கா
நியூயார்க்கில் இந்தியா- பாக். வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்தித்து பேச இருப்பது சிறப்பான செய்தி என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
5. மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதிய பின்னர் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திக்கிறார்கள்
பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதிய பின்னர் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் நியூயார்க்கில் சந்திக்கவுள்ளனர்.