கிரிக்கெட்

இங்கிலாந்து பெண்கள் அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வி + "||" + Australia failed to beat England women's team,

இங்கிலாந்து பெண்கள் அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வி

இங்கிலாந்து பெண்கள் அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வி
இங்கிலாந்து பெண்கள் அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது.
மும்பை,

மும்பையில் நடந்து வரும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை இங்கிலாந்து அணி 17 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாமி பியூமோன்ட் (58 ரன்), நாதலி சிவெர் (68 ரன்) அரைசதம் அடித்து களத்தில் இருந்தனர். நாளை நடக்கும் 3-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் சந்திக்கின்றன.