கிரிக்கெட்

ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் மீது பந்தை சேதப்படுத்தியதாக புகார் + "||" + The Australian player complained that he had hit the ball over Pancroft

ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் மீது பந்தை சேதப்படுத்தியதாக புகார்

ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் மீது பந்தை சேதப்படுத்தியதாக புகார்
மர்ம பொருள் வைத்திருந்து பந்தை சேதப்படுத்தியதாக பான்கிராப்ட் மீது புகார் எழுந்துள்ளது.

கேப்டவுனில் நடந்து வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் பான்கிராப்ட் புதுவிதமான சர்ச்சையில் சிக்கியுள்ளார். பீல்டிங் செய்த போது அவர் தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய மஞ்சள் நிற பொருளை எடுத்து தனது உள்ளாடைக்குள் போட்ட காட்சி வீடியோவில் தெளிவாக பதிவானது. அதை பயன்படுத்தி அவர் பந்தை சேதப்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகம் கிளம்பியுள்ளது. தென்ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேமி சுமித் கூறுகையில், ‘அந்த பொருள் சொரசொரப்பு காகிதம் போன்று இருக்கிறது. அதில் தேய்த்து பந்தின் தன்மையை அவர் மாற்றி இருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் நடுவர் பந்தை உடனடியாக மாற்றாதது எனக்கு ஆச்சரியம் அளித்தது’ என்றார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறுகையில் ‘உணவு இடைவேளையின் போது வீரர்களிடம் இது பற்றி ஆலோசித்தேன். பான்கிராப்ட்டின் செயல் விளையாட்டின் உண்மையான உத்வேகத்துக்கு அழகல்ல. இதற்காக வருந்துகிறேன். இதன் மூலம் கேப்டனாகிய எனது நேர்மை குறித்தும், அணியின் நேர்மை குறித்தும் கேள்விகள் எழுகிறது. வருங்காலத்தில் இது போன்று மீண்டும் நடக்கக்கூடாது’ என்றார். பான்கிராப்ட் கூறுகையில், ‘நடுவர்களிடம் நான் பேசினேன். என் மீது பந்தை சேதப்படுத்த முயற்சித்ததாக குற்றச்சாட்டு சுமத்தி இருக்கிறார்கள்’ என்றார்.

ஐ.சி.சி. போட்டி நடுவரின் விசாரணைக்கு பிறகே பான்கிராப்ட் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரிய வரும். 25 வயதான பான்கிராப்ட் முதல் இன்னிங்சில் 77 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. தாராபுரத்தில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம்: கைதானவர் புகைப்படத்திற்கு பதிலாக வேறு ஒருவரின் படம் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் பா.ஜனதா கட்சியினர் புகார்
தாராபுரத்தில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கைதானவரின் புகைப்படத்திற்கு பதிலாக வேறு ஒருவரின் புகைப்படம் இடம் பெற்று இருப்பதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜனதா கட்சியினர் போலீசில் புகார் செய்தனர்.
2. பாலியல் புகார் கொடுத்த பெண் சப்–இன்ஸ்பெக்டருக்கு இழப்பீடு: மனித உரிமை ஆணைய உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை
பாலியல் புகார் கொடுத்த பெண் சப்–இன்ஸ்பெக்டருக்கு, சப்–இன்ஸ்பெக்டர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது.
3. மானபங்கம் செய்ததாக புகார் கொடுத்த பெண்ணின் தந்தை அடித்துக் கொலை
மானபங்கம் செய்ததாக புகார் கொடுத்த பெண்ணின் தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. சசிகுமார் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கலுக்கு பிறகும் விசாரணை, கலெக்டரிடம் புகார் மனு
சசிகுமார் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
5. சி.பி.ஐ. நோட்டீஸ் திருத்தப்பட்டதாக புகார்: விஜய் மல்லையா விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை - காங்கிரஸ் வலியுறுத்தல்
விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பியோடிய விவகாரத்தில் கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.