கிரிக்கெட்

கிளப் கிரிக்கெட்டில் 20 பந்தில் சதம் விளாசிய விருத்திமான் சஹா + "||" + Vidhyaman Shaha was 102 runs off 20 deliveries in club cricket

கிளப் கிரிக்கெட்டில் 20 பந்தில் சதம் விளாசிய விருத்திமான் சஹா

கிளப் கிரிக்கெட்டில் 20 பந்தில் சதம் விளாசிய விருத்திமான் சஹா
கிளப் கிரிக்கெட்டில் விருத்திமான் சஹா 20 பந்தில் சதம் விளாசினார்.
கொல்கத்தா,

ஜே.சி.முகர்ஜி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட்டில் மோகன் பகான்- பி.என்.ஆர். மனமகிழ் மன்றம் ஆகிய கிளப் அணிகள் மோதிய ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள கலிஹாத் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் மோகன் பகான் கிளப்புக்காக களம் கண்ட விருத்திமான் சஹா 20 பந்துகளில் 102 ரன்கள் விளாசி மிரள வைத்தார். இதில் 14 சிக்சரும், 4 பவுண்டரியும் அடங்கும். சஹா வெறும் 2 ரன்களை மட்டுமே ஓடி எடுத்தார். அவரது வாணவேடிக்கையால் 152 ரன்கள் இலக்கை மோகன் பகான் அணி 7-வது ஓவரிலேயே எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் அமான் புரோசாத் வீசிய 7-வது ஓவரில் 6 பந்துகளையும் சஹா சிக்சருக்கு பறக்க விட்டது குறிப்பிடத்தக்கது.


33 வயதான விருத்திமான் சஹா இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் விக்கெட் கீப்பர் ஆவார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக ரூ.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். சஹா கூறுகையில், ‘இது சாதனையா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஐ.பி.எல். போட்டியை மனதில் கொண்டு விதவிதமான ஷாட்டுகளை அடிக்க முயற்சித்தேன். பந்து எல்லாமே பேட்டின் நடுபகுதியில் பட்டதால் தெறித்து ஓடியது. 20 ஓவர் கிரிக்கெட்டில் நான் தொடக்க ஆட்டக்காரராக விளையாடவே எப்போதும் விரும்புகிறேன். ஆனால் ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்கள் வரிசைக்கு டேவிட் வார்னர், ஷிகர் தவான் உள்ளனர். எனவே அணிக்காக எந்த வரிசையில் இறங்கவும் தயாராக உள்ளேன்.’ என்றார். அதிகாரபூர்வ 20 ஓவர் போட்டியை எடுத்துக் கொண்டால் அதிவேக சத சாதனையை வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் தன்வசம் வைத்துள்ளார். அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்காக 30 பந்துகளில் சதம் விளாசியிருப்பது குறிப்பிடத்தக்கது.