கிரிக்கெட்

தகுதி சுற்று கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் + "||" + West Indies win to qualify round tournament Afghanistan champion

தகுதி சுற்று கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன்

தகுதி சுற்று கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன்
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் 100 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்தி ரஷித்கான் சாதனை படைத்தார்.
ஹராரே,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றின் இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் அணிகள் ஹராரே நகரில் நேற்று மோதின. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 46.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ரோவ்மன் பவெல் 44 ரன்கள் எடுத்தார். கிறிஸ் கெய்ல் 10 ரன்னில் கேட்ச் ஆனார். ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜீப் ரகுமான் 4 விக்கெட்டுகளும், குல்படின் நயிப் 2 விக்கெட்டுகளும், ரஷித்கான், ஷரபுத்தீன் அஷ்ரப், டவ்லத் ஜட்ரன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 40.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தனதாக்கியது முகமத் ஷாசாத் (84 ரன்), ரக்மத் ஷா (51 ரன்) அரைசதம் விளாசி அசத்தினர். இவ்விரு அணிகளும் ஏற்கனவே 2019-ம்ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் 19 வயதான ரஷித்கான் ஒரு விக்கெட் எடுத்த போது, அவரது ஒரு நாள் போட்டி விக்கெட் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. தனது 44-வது ஒரு நாள் போட்டியிலேயே இந்த மைல்கல்லை எட்டிய ரஷித்கான் 100 விக்கெட்டுகளை வேகமாக சாய்த்து புதிய உலக சாதனை படைத்து இருக்கிறார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 52 ஆட்டங்களில் 100 விக்கெட்டுகளை எடுத்ததே சாதனையாக இருந்தது.