கிரிக்கெட்

”வாழ்நாள் தடை என்பது மிகவும் மோசமானது” ஸ்மித்திற்கு ஆஷிஸ் நெஹ்ரா ஆதரவு + "||" + Life ban for Smith will be 'too harsh': Ashish Nehra

”வாழ்நாள் தடை என்பது மிகவும் மோசமானது” ஸ்மித்திற்கு ஆஷிஸ் நெஹ்ரா ஆதரவு

”வாழ்நாள் தடை என்பது மிகவும் மோசமானது” ஸ்மித்திற்கு ஆஷிஸ் நெஹ்ரா ஆதரவு
பந்தை சேதப்படுத்தியதால் சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஸ்மித்திற்கு ஆஷிஸ் நெஹ்ரா ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் கேப்டன் பதவியும், டேவிட் வார்னரின் துணைக்கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. இதில் ஸ்மித் ஒருபோட்டியில் விளையாட தடையும், 100 சதவீதம் அபராதமும், வார்னருக்கு ஒருபோட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. பந்தை சேதப்படுத்தி சிக்கிய பான்கிராப்டுக்கு 75 சதவீதம் ஊதியம் அபராதமாகவும் விதிக்கப்பட்டது.

பந்தை சேதப்படுத்திய விவகாரம் கிரிக்கெட் உலகில் ஸ்மித்தின் ஒட்டுமொத்த மரியாதையையும் சிதைத்துவிட்டது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பின் அந்த அணிக்கு ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- “ ஸ்மித், வார்னர் செய்தது தவறுதான் இல்லையென கூறவில்லை. பந்தை சேதப்படுத்தும் தவறை இருவரும் முதல்முறையாக செய்கிறார்கள் என்று கூறினால்கூட அதுவும் தவறுதான். அவர்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளனர், அவர்களுக்கு ஐசிசியும் தண்டனை கொடுத்துவிட்டது.

‘வாழ்நாள் தடை என்பது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடுமையாக இருக்கும். அவர்களுக்கு மட்டுமல்ல, எந்த வீரருக்கும் அதுபோன்ற தடையை விதிக்கக்கூடாது. தவறை ஒப்புக்கொண்டதால் அவர்களின் தவறை மன்னிக்க வேண்டும். இருவரும் மிகச்சிறந்த வீரர்கள், இருவரும் இல்லாத ஐபிஎல் போட்டியில் இல்லையென்றால் அது மிகப்பெரிய சோகமாகும்” இவ்வாறு அவர் கூறினார்.