ஸ்மித், டேவிட் வார்னர் ஆகிய இருவரும் ஒரு ஆண்டு தடையை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல்


ஸ்மித், டேவிட் வார்னர் ஆகிய இருவரும் ஒரு ஆண்டு தடையை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 27 March 2018 10:08 AM GMT (Updated: 27 March 2018 10:08 AM GMT)

ஸ்மித், டேவிட் வார்னர் ஆகிய இருவரும் ஒரு ஆண்டு தடையை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து நாளிதழில் செய்திகள் வெளியாகியுள்ளது. #BallTampering

மெல்போர்ன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தனது ஆலோசனையின் படி தான் நடந்தது என்று தவறை ஒப்புக்கொண்ட கேப்டன் ஸ்டீவன் சுமித்துக்கு, முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் ஆட்டத்தின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் செயல்பட்ட ஸ்டீவன் சுமித் உள்ளிட்ட வீரர்களுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆயுட்கால தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், வாழ்நாள் தடை மிகவும் மோசமானது என கூறி சில முன்னாள் வீரர்கள் ஸ்மித்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்தனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிளார்க்கும், ஸ்மித்தை மன்னிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். 

இந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், பயிற்சியாளர் லீமன் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் கார்டியன் நாளிதழில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பை வகிக்க நிரந்தர தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 


Next Story