கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழக வீராங்கனை ஹேமலதா தேர்வு + "||" + Indian cricket team Hemalatha selection of Tamil Nadu

இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழக வீராங்கனை ஹேமலதா தேர்வு

இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழக வீராங்கனை ஹேமலதா தேர்வு
முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்திய பெண்கள் அணி அடுத்து இங்கிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.

மும்பை,

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்திய பெண்கள் அணி அடுத்து இங்கிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. நாக்பூரில் ஏப்ரல் 6, 9, 12–ந்தேதிகளில் இந்த ஆட்டங்கள் நடக்கின்றன.

இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக வீராங்கனை ஆல்–ரவுண்டர் ஹேமலதா முதல்முறையாக தேர்வாகியுள்ளார். சமீபத்தில் இந்திய ‘ஏ’ அணிக்காக ஆடிய 23 வயதான ஹேமலதா இதுவரை சர்வதேச போட்டிகளில் ஆடியதில்லை. இவர் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். அதே சமயம் அணியில் இருந்து பூனம் ரவுத், மோனா மேஷ்ரம் நீக்கப்பட்டனர்.

இந்திய பெண்கள் அணி வருமாறு:– மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கவுர், மந்தனா, தீப்தி ‌ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹேமலதா, வேதா கிருஷ்ணமூர்த்தி, தேவிகா, ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூஜா வஸ்ட்ராகர், எக்தா பிஷ்ட், பூனம் யாதவ், சுஷ்மா வர்மா, ராஜேஸ்வரி கெய்க்வாட்.