கிரிக்கெட்

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியிடம் இங்கிலாந்து தோல்வி + "||" + Triangular 20 Oversight Cricket: England lost to Australia

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியிடம் இங்கிலாந்து தோல்வி

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியிடம் இங்கிலாந்து தோல்வி
பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

மும்பை,

பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 5–வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.4 ஓவர்களில் 96 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 11.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. எலிசே பெர்ரி 47 ரன்னுடனும், கேப்டன் மெக் லேனிங் 41 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி பெற்ற 3–வது வெற்றி இதுவாகும். அத்துடன் முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்ட இந்திய அணி, இங்கிலாந்தை சந்திக்கிறது. நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து–ஆஸ்திரேலியா அணிகள் மீண்டும் மோதுகின்றன.