கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு குறைந்தபட்சமாக ரூ.1,300 நிர்ணயம் + "||" + IPL Cricket Chennai competition Ticket Prices Announced

ஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு குறைந்தபட்சமாக ரூ.1,300 நிர்ணயம்

ஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு குறைந்தபட்சமாக ரூ.1,300 நிர்ணயம்
11–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஏப்ரல் 7–ந் தேதி முதல் மே 27–ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

11–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஏப்ரல் 7–ந் தேதி முதல் மே 27–ந் தேதி வரை நடக்கிறது. மும்பையில் நடைபெறும் இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்–சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் 7 லீக் ஆட்டங்களில் ஆடுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொந்த மண்ணில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஏப்ரல் 10–ந் தேதி இரவு 8 மணிக்கு நடக்கிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் மோதும் ஆட்டங்களுக்கான டிக்கெட் விலை வெளியாகி இருக்கிறது. குறைந்தபட்ச டிக்கெட் கட்டணமாக ரூ.1,300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.6,500 (பெவிலியன் டெரஸ்) ஆகும். மேலும் ரூ.1,500, ரூ.2,500, ரூ.4,500, ரூ.5 ஆயிரம் ஆகிய விலைகளிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்–லைனிலும், ஸ்டேடியத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படும். அதற்குரிய தேதி ஒரிரு நாளில் அறிவிக்கப்படுகிறது.தொடர்புடைய செய்திகள்

1. வீராட் கோலி-மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை
கிரிக்கெட் வீரர் வீராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2. பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியை வீழ்த்தி இலங்கை ஆறுதல் வெற்றி
இந்தியா – இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கட்டுநாயகேவில் நேற்று நடந்தது.
3. 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் இலங்கை–வங்காளதேசம் மோதல்
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்குகிறது.
4. இலங்கைக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி மீண்டும் வெற்றி
இலங்கைக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்ற
5. ‘இந்திய கிரிக்கெட் அணி முன்னேற்றம் காண வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்’ விராட்கோலிக்கு, கங்குலி அறிவுரை
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி 1–4 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கேப்டன் விராட்கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.