கிரிக்கெட்

ஆஸ்திரேலியா–தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம் + "||" + Australia-South Africa The last Test starts today

ஆஸ்திரேலியா–தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

ஆஸ்திரேலியா–தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்
தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. முந்தைய டெஸ்டில் அரங்கேறிய பந்தை சேதப்படுத்திய சலசலப்பு இந்த தொடரையே உலுக்கி போட்டு விட்டது. இப்போது ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில், தொடரில் 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் தென்ஆப்பிரிக்க அணி மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதற்குரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. சொந்த மண்ணில் 1970–ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அந்த மோசமான வரலாற்றை மாற்றி அமைக்க பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியினர் வரிந்து கட்டி நிற்பார்கள். மேலும் தனது கடைசி சர்வதேச போட்டியில் களம் காணும் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலை வெற்றியோடு வழி அனுப்ப வேண்டும் என்பதிலும் உறுதியுடன் இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ரென்ஷா, ஜோ பர்ன்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடுவார்கள். ஸ்டீவன் சுமித் இடத்தில் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் விளையாடுவார் என்று தெரிகிறது. விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் அணி வழிநடத்துவார். மனரீதியாக துவண்டு போய் உள்ள ஆஸ்திரேலிய அணி அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு எழுச்சி பெறுமா? என்பது சந்தேகம் தான். இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


ஆசிரியரின் தேர்வுகள்...