கிரிக்கெட்

உலக கோப்பை தகுதி சுற்றில் தோல்வி எதிரொலி: ஜிம்பாப்வே கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் நீக்கம் + "||" + World Cup qualifying round echo failure: Zimbabwe captain and coaches removed

உலக கோப்பை தகுதி சுற்றில் தோல்வி எதிரொலி: ஜிம்பாப்வே கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் நீக்கம்

உலக கோப்பை தகுதி சுற்றில் தோல்வி எதிரொலி: ஜிம்பாப்வே கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் நீக்கம்
சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் ஜிம்பாப்வே அணி சூப்பர் சிக்ஸ் சுற்றோடு வெளியேறியது.

ஹராரே,

சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் ஜிம்பாப்வே அணி சூப்பர் சிக்ஸ் சுற்றோடு வெளியேறியது. இதன் கடைசி லீக்கில் குட்டி அணியான ஐக்கிய அரபு அமீரத்துக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் தோற்றதால் இறுதிப்போட்டி வாய்ப்பை மட்டுமின்றி 2019–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் ஜிம்பாப்வே பறிகொடுத்தது. 1979–ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஜிம்பாப்வே அணி உலக கோப்பையில் கால்பதிக்க முடியாத பரிதாபம் ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் கடும் அதிருப்திக்குள்ளான ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம், அந்த அணியின் கேப்டன் கிரேமி கிரிமரை நேற்று அதிரடியாக நீக்கியது. அத்துடன் அணியின் தலைமை பயிற்சியாளர் ஹீத் ஸ்டீரிக், பேட்டிங் பயிற்சியாளர் குளுஸ்னர், பந்து வீச்சு பயிற்சியாளர் டக்லஸ் ஹோண்டா மற்றும் உதவி பயிற்சியாளர்களும் கழற்றிவிடப்பட்டனர். புதிய கேப்டனாக பிரன்டன் டெய்லர் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.