கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நினைத்து உணர்ச்சிவசப்பட்ட டோனி + "||" + Think of Chennai Super Kings Emotionally Tony

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நினைத்து உணர்ச்சிவசப்பட்ட டோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நினைத்து உணர்ச்சிவசப்பட்ட டோனி
2 ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்பி இருக்கிறது.

சென்னை,

2 ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்பி இருக்கிறது. 8 ஆண்டுகளாக சென்னை அணியின் வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய டோனி, மீண்டும் மஞ்சள் நிற சீருடையை அணிய இருப்பதை நினைத்து உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். சென்னை நட்சத்திர ஓட்டலில் நடந்த விழாவில் டோனி பேசுகையில், ‘கடந்த 2 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட முடியாமல் போனது மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளித்தது. கடந்த கால கசப்பான நினைவுகளை மறந்து விடுவோம். எதிர்காலத்தை நோக்கி வெற்றியுடன் நடைபோடுவோம். இன்று முக்கியமான வி‌ஷயம் என்னவென்றால் உங்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது. இனி நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது தான் முக்கியமானதாகும். நாங்கள் திரும்ப வந்து விட்டோம், வந்து விட்டோம்’ என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார். அப்போது சுரேஷ் ரெய்னா, டோனிக்குதண்ணீர் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தினார். டோனி உணர்ச்சிகரமாக பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது.


ஆசிரியரின் தேர்வுகள்...