கிரிக்கெட்

ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை சென்னையில் நாளை தொடக்கம் + "||" + The teams. Ticket sales Starting tomorrow in Chennai

ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை சென்னையில் நாளை தொடக்கம்

ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை சென்னையில் நாளை தொடக்கம்
11–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 7–ந்தேதி முதல் மே 27–ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.

சென்னை,

11–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 7–ந்தேதி முதல் மே 27–ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 7 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

சேப்பாக்கத்தில் 10–ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஸ்டேடியத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை டிக்கெட் விற்பனை நடைபெறும். ஒருவருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் கொடுக்கப்படமாட்டாது. டிக்கெட்டின் குறைந்த பட்ச விலை ரூ.1,300. மேலும் ரூ.2,500, 4,500 ரூ.5,000, ரூ.6,500 ஆகிய விலைகளிலும் டிக்கெட் கிடைக்கும். ஆன்லைன் மூலமும் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். www.chennaisuperkings.com, www.bookmyshow.com ஆகிய இணையதளங்களில் டிக்கெட் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டு இருக்கிறது.