இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் - நியூசிலாந்து அணிக்கு 382 ரன்கள் இலக்கு


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் - நியூசிலாந்து அணிக்கு 382 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 2 April 2018 10:45 PM GMT (Updated: 2 April 2018 8:55 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணிக்கு 382 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து அணி 307 ரன்னும், நியூசிலாந்து அணி 278 ரன்னும் எடுத்தன.

29 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் ஜோ ரூட் 30 ரன்னுடனும், டேவிட் மலான் 19 ரன்னுடனும் களத்தில் நின்றனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. ஜோரூட், டேவிட் மலான் ஆட்டத்தை தொடர்ந்தனர். அணியின் ஸ்கோர் 262 ரன்னாக உயர்ந்த போது இந்த ஜோடி பிரிந்தது. டேவிட் மலான் (53 ரன், 105 பந்துகளில் 7 பவுண்டரியுடன்) கிரான்ட்ஹோம் பந்து வீச்சில் நிகோல்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 97 ரன்கள் சேர்த்தது. அடுத்து கேப்டன் ஜோரூட் (54 ரன்கள், 128 பந்துகளில் 4 பவுண்டரியுடன்) ஆட்டம் இழந்தார். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 106.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்து இருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. டாம் லாதம் 25 ரன்னுடனும், ஜீத் ராவல் 17 ரன்னுடனும் களத்தில் நின்றனர். இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

Next Story