கிரிக்கெட்

ஸ்மித், வார்னருக்கான தண்டனையை குறைக்கவேண்டும்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல் + "||" + Ball-tampering scandal: Players' union wants Smith, Warner, Bancroft bans to be reduced

ஸ்மித், வார்னருக்கான தண்டனையை குறைக்கவேண்டும்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஸ்மித், வார்னருக்கான தண்டனையை குறைக்கவேண்டும்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
ஸ்மித், வார்னருக்கான தண்டனையை குறைக்கவேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. #BallTamperingScandal #Smith
சிட்னி, 

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட தலா ஓராண்டு தடையும், இளம் வீரர் கேமரூன் பான்கிராப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கையை எடுத்தது. 

தாயகம் திரும்பிய ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் தேசத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டதாகவும், தங்களை மன்னிக்கும்படியும் கண்ணீர் விட்டனர்.குறுக்குவழியை கையாண்டதால் பெயர், புகழை இழந்ததுடன் தனிப்பட்ட முறையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்த ஊதியம், போனஸ், போட்டி கட்டணம், ஸ்பான்சர்ஷிப் இழப்பு, ஐ.பி.எல். தடை போன்றவற்றின் மூலம் ஏறக்குறைய தலா ரூ.30 கோடி வருவாயை இருவரும் பறிகொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ஸ்மித், வார்னர் பான்கிராப்ட் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட தண்டனை மிகவும் அதிகபட்சமானது என்று ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு தலைவர் கிரேக் டையர் சிட்னியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மேற்கூறிய தகவலை வெளியிட்டார். மேலும், வீரர்களுக்கான தடையை குறைக்கவும் வலியுறுத்துவதாக தெரிவித்து உள்ளார். தொடர்புடைய செய்திகள்

1. சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட வார்னர் ஒப்பந்தம்
சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட வார்னர் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
2. கிரேடு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஸ்டீவ் ஸ்மித், வார்னருக்கு ஐசிசி அனுமதி
கிரேடு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஸ்டீவ் ஸ்மித், வார்னருக்கு ஐசிசி அனுமதி அளித்துள்ளது. #ICC #Smith #Warner
3. இனி ஆஸ்திரேலியாவுக்குக்காக விளையாட மாட்டேன் - கண்ணீர் மல்க வார்னர் பேட்டி
தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டுள்ள வார்னர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதுடன் இனி ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட போவதில்லை என தெரிவித்துள்ளார். #DavidWarner #CricketBall
4. சுமித், வார்னர் குறித்து அம்பலமான மற்றொரு தகவல்
எச்சரிக்கைக்கு பிறகும் சுமித், வார்னர் இவ்வாறு நடந்து உள்ளனர் ஆஸ்திரேலிய நடுவர் கடிதம்.
5. விமான நிலையத்தில் ஸ்மித் குற்றவாளி போல் நடத்தப்பட்டது வேதனையளிக்கிறது: கெவின் பீட்டர்சன்
விமான நிலையத்தில் ஸ்மித் குற்றவாளி போல் நடத்தப்பட்டது வேதனையளிக்கிறது என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்து உள்ளார்.