நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் சொல்ல வேண்டாம் அப்ரிடிக்கு சச்சின் கண்டனம்


நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் சொல்ல வேண்டாம் அப்ரிடிக்கு  சச்சின் கண்டனம்
x
தினத்தந்தி 5 April 2018 10:48 AM GMT (Updated: 5 April 2018 10:48 AM GMT)

நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் சொல்ல வேண்டாம் என அப்ரிடிக்கு சச்சின் தெண்டுல்கர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மும்பை

ஷாகித் அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வருந்தத்தக்க சம்பவங்கள் நடந்து வருகின்றன. சுதந்திரம் கோரி போராடும் அப்பாவி மக்கள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் ஐநா தலையிட்டு அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நிறுத்த வேண்டும் என கூறி இருந்தார்.
ஷாகித் அப்ரிடியின் டுவீட் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அவருக்கு இந்தியர்கள் பலரும் பதிலடி கொடுத்துவருகின்றனர். அஃப்ரிடியின் டுவீட்டுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், தற்போதைய கேப்டன் விராட் கோலி, கம்பீர், ரெய்னா ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர். அஃப்ரிடியின் கருத்து தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கபில் தேவ், அப்ரிடிக்கெல்லாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? யார் அவர்? இது போன்ற நபர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தரக்கூடாது என காட்டமாக பதிலளித்தார். 

இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி, ஒரு இந்தியராக நம் நாட்டுக்கு எது சிறந்ததோ அது குறித்துச் சொல்லலாம். என்னுடைய நலன்கள் எப்போதும் நாட்டின் நலனை மையப்படுத்தியே இருக்கும். நாட்டின் நலன்களுக்கு விரோதமான எதையும் நான் ஒருபோதும் ஆதரிக்கமாட்டேன். ஒரு விஷயத்தை பற்றி முழுமையாக தெரியாமல் கருத்துக் கூறக்கூடாது. சிலர் கூறுகிறார்கள் என கோலி தெரிவித்துள்ளார். அப்ரிடிக்கு பதிலடி கொடுத்து கம்பீர் டுவீட் செய்துள்ளார். 

அதில், காஷ்மீர் தொடர்பான அஃப்ரிடியின் டுவிட்டுக்கு ஊடகங்கள் என்னிடம் பதில் கேட்கிறார்கள். இதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது? அப்ரிடியின் அதிகாரத்தில் யு.என் என்றால் ”அன்டர் நைண்டீன்” என்று அர்த்தம் புரிந்துள்ளார். இதை ஊடகங்கள் பெரிதாக்க வேண்டாம். அப்ரிடியின் பேச்சு நோபாலில் விக்கெட் விழுந்து மகிழ்வதைப் போன்றது என்று கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இனிமேலும் அப்படித்தான் இருக்கும். என்னுடைய முன்னோர்கள் வாழ்ந்த பகுதி, பிறந்த இடம். அதனால், காஷ்மீர் பகுதிக்குள் தீவிரவாத செயல்களை தூண்டிவிடாமல், அத்துமீறி தாக்குதல் நடத்தாமல் இருக்க அப்ரிடி தங்கள் நாட்டு ராணுவத்தை கேட்டுக்கொள்ள வேண்டும். எங்களுக்கு தேவை அமைதி. ரத்தம் சிந்துவதும், வன்முறையும் அல்ல என கடும் கோபத்துடன் பதிலளித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், 'எங்கள் நாட்டு மக்கள் அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் திறமை கொண்டவர்கள். அதனால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை வேறு யாரும் சொல்ல தேவையில்லை' என கூறியுள்ளார். இவற்றிற்கு பதில் அளித்த அப்ரிடி ஒரு விளையாட்டு வீரராக நான் அனைவரையும் மதிக்கிறேன் மனித உரிமைகள் என வரும் போது நாங்கள் எங்கள் அப்பாவி காஷ்மீரிகள் என எதிர்பார்க்கிறோம் என கூறி உள்ளார்.

Next Story