கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான டி.வி. ஒளிபரப்பு உரிமத்தை ரூ.6,138 கோடிக்கு பெற்றது ஸ்டார் நிறுவனம் + "||" + Tv for international cricket Star company got Rs 6,138 crore for broadcast license

சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான டி.வி. ஒளிபரப்பு உரிமத்தை ரூ.6,138 கோடிக்கு பெற்றது ஸ்டார் நிறுவனம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான டி.வி. ஒளிபரப்பு உரிமத்தை ரூ.6,138 கோடிக்கு பெற்றது ஸ்டார் நிறுவனம்
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகள் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான உரிமத்தை ரூ.6,138.1 கோடிக்கு ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.
புதுடெல்லி,

இந்த மாதம் ஏப்ரல் 15-ந்தேதி முதல் 2023-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை உள்ளூரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் சர்வதேச போட்டிகளை (ஐ.சி.சி. நடத்தும் போட்டியை தவிர்த்து) டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முதல் முறையாக ‘ஆன்-லைன்’ மூலம் ஏலம் விட்டது.

மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த ‘ஆன்-லைன்’ ஏலத்தில் ஸ்டார் குழுமம், சோனி, ஜியோ ஆகிய நிறுவனங்கள் இடையே பலத்த போட்டி நிலவியது. இந்த நிறுவனங்கள் ஏலத் தொகையை தொடர்ந்து உயர்த்தி கொண்ட வந்ததால், கிரிக்கெட் வாரியம் உற்சாகத்திற்குள்ளானது.

இந்த நிலையில் ஸ்டார் குழுமம் ரூ.6,138.1 கோடிக்கு ஒளிபரப்பு அதிர்ஷ்டத்தை தட்டிச் சென்று இருக்கிறது. இதில் டிஜிட்டல் உரிமமும் அடங்கும். முந்தைய 5 ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் நிறுவனம் ரூ.3,851 கோடிக்கு தான் பெற்றிருந்தது. ஆனால் இந்த முறை முன்னணி நிறுவனங்கள் சில வரிந்து கட்டியதால், 59 சதவீத தொகை அதிகரித்து விட்டது.

மேற்கண்ட காலக்கட்டத்தில் இந்திய அணி சொந்த மண்ணில் 102 சர்வதேச போட்டிகளில் (22 டெஸ்ட், 42 ஒரு நாள் போட்டி, 38 இருபது ஓவர் போட்டி) விளையாடுகிறது. அதாவது உரிமத்தை பெற்ற ஸ்டார் நிறுவனம், ஒரு போட்டிக்கு சராசரியாக ரூ.60.18 கோடியை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்குகிறது. உள்ளூரில் நடக்கும் சர்வதேச பெண்கள் கிரிக்கெட் மற்றும் முதல்தர போட்டிகளை ஒளிபரப்பு செய்வதும் இவற்றில் உண்டு.

ஏற்கனவே இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தான் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 2018 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான ஐ.பி.எல். போட்டிக்கான டி.வி. ஒளிபரப்பு உரிமத்தை சில மாதங்களுக்கு முன்பு ஸ்டார் நிறுவனம் ரூ.16,347 கோடிக்கு (ஒரு ஐ.பி.எல். ஆட்டத்திற்கு சராசரியாக ரூ.54½ கோடி) வாங்கியது நினைவிருக்கலாம்.

இதே போல் 2015-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை உலக கோப்பை உள்பட ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமமும் ஸ்டார் நிறுவனம் (ரூ.12,340 கோடிக்கு வாங்கியது) வசமே இருப்பது குறிப்பிடத்தக்கது.