கிரிக்கெட்

ஐபிஎல் போட்டிகளில் விளையாட அழைத்தால் கூட நான் செல்லமாட்டேன் மீண்டும் அப்ரிடி சர்ச்சை + "||" + Pakistan Super League Will Be Bigger Than Indian Premier League Very Soon, Says Shahid Afridi

ஐபிஎல் போட்டிகளில் விளையாட அழைத்தால் கூட நான் செல்லமாட்டேன் மீண்டும் அப்ரிடி சர்ச்சை

ஐபிஎல் போட்டிகளில் விளையாட அழைத்தால் கூட நான் செல்லமாட்டேன் மீண்டும் அப்ரிடி சர்ச்சை
எதிர்காலத்தில் ஐபிஎல் போட்டியைப் பின்னுக்குத் தள்ளி பெரிதாக உருவெடுக்கும் பாகிஸ்தான் பிஎஸ்எல் போட்டிகள் என அப்ரிடி கூறி உள்ளார். #ShahidAfridi


பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி காஷ்மீர் பிரச்சினை குறித்து டுவிட் செய்துள்ளார். அதில் ‘‘இந்தியா ஆக்கரமிப்பு காஷ்மீரில் அபாயகரமான மற்றும் மோசமான சூழ்நிலை நடந்து கொண்டிருக்கிறது. அடக்குமுறை ஆட்சியால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக குரல் கொடுங்கள். ஐநா சபை மற்றும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகள் எங்கே?. அவர்கள் ஏன் இதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை’’ என பதிவு செய்திருந்தார்.  

அஃப்ரிடி தெரிவித்த இந்த கருத்துக்கு, காம்பீர், ரெய்னா, சச்சின , கபில் தேவ் உள்ளிட்டவர்கள்  தக்க பதிலடி கொடுத்தர். இருப்பினும், இந்தியாவை மேலும் விமர்சிக்கும் விதமாக, ஐபிஎல் போட்டிகள் தொடர்பாகக் கருத்து கூறியுள்ளார் அப்ரிடி.

இதுகுறித்து பாகிஸ்தான் டி.வி சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

``ஐபிஎல் போட்டிகளில் விளையாட அழைத்தால் கூட நான் செல்லமாட்டேன். பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள், எதிர்காலத்தில் ஐபிஎல் போட்டியைப் பின்னுக்குத் தள்ளி பெரிதாக உருவெடுக்கும். பிஎஸ்எல் போட்டிகளில் விளையாடுவதையே நான் விரும்புகிறேன். ஒருபோதும், ஐபிஎல்-லில் விளையாட எனக்கு ஆர்வம் கிடையாது" என்றார். 

ஐபிஎல் தொடக்க சீசனில், ஹைதராபாத் டெக்கான் அணிக்காக விளையாடிய அப்ரிடி, அப்போது, ''மிகச் சிறப்பான கிரிக்கெட் தொடர் ஐபிஎல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதில் விளையாடிய அனுபவத்தை என்னால் மறக்க முடியாது" எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து 153 ரன்னில் சுருண்டது
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து 153 ரன்னில் சுருண்டது.
2. பாகிஸ்தான்: இந்திய மீனவர்கள் 12 பேர் கைது
பாகிஸ்தானின் கடல் பாதுகாப்பு படையினர் மூலம், இந்திய மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி 2–வது வெற்றி பாகிஸ்தானை வீழ்த்தியது
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2–வது வெற்றியை பெற்றது.
4. பாகிஸ்தான் தாக்குதலில் ராணுவ தொழிலாளி பலி
பாகிஸ்தான் தாக்குதலில் ராணுவ தொழிலாளி ஒருவர் பலியானார்.
5. பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: நியூசிலாந்து வீரர் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி அசத்தல்
பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று பகல்–இரவு மோதலாக நடந்தது.