கிரிக்கெட்

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் முதன் முறையாக தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படுகிறது + "||" + Sharing IPL content with DD an act of courtesy: Star India's Uday Shankar

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் முதன் முறையாக தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படுகிறது

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் முதன் முறையாக தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படுகிறது
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் முதன் முறையாக தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படுகிறது
* ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் முதன் முறையாக தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட உள்ளது. கட்டண சேனல்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்ட நிலையில் தற்போது தூர்தர்ஷனிலும் காணலாம்.   ஒளிபரப்பு உரிமை பெற்றுள்ள ஸ்டார் இந்தியா தூர்தசனுடன்  தனது ஒளிபரப்பை பகிர்ந்து கொள்கிறது 

* இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமைக்காக ரூ.6,138.1 கோடி ஏலம் விடப்பட்டுள்ளதால் பி.சி.சி.ஐ., செம மகிழ்ச்சியில் உள்ளது.

* ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்நிலையில் ரோகித் சர்மா தோனிக்கு ஸ்பெஷல் மெசேஜ் ஒன்றை வழங்கியுள்ளார். ரோகித் கூறியதாவது, பேட்டிங்கில் எந்த டவுன் ஆர்டரில் நான் இறங்குகிறேன் என்பதை அதுவரை அது சர்ப்ரைசாக இருக்கட்டும் என தெரிவித்துள்ளார். மேலும், எந்த மாதிரியான வீரர்களை கொண்டிருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் எப்போதுமே நல்ல அணி. மும்பை இந்தியன்ஸுக்கு வெளியே நடக்கும் விஷயங்கள் எங்களைப் பாதிக்காது. ஒரு அணியாக நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக இதைத்தான் செய்தோம் எனவும் கூறியுள்ளார். சமீபத்தில் சிஎஸ்கே அணியில் பேட்டிங் ஆரட்டர் குறித்த தகவல் வெளியான நிலையில், ரோகித் சர்மா தனது எண்ட்ரியை சிக்ரெட்டாக வைத்திருக்க போகிறேன் என்று மறைமுகமாக ஏதோ மேசேஜ்ஜை தோனிக்கு வழங்கியுள்ளார்.

* ஐபிஎல் கிரிக்கெட்  துவக்க விழாவில் ஹிருத்திக் ரோஷன், வருண் தவான், தமன்னா உள்ளிட்ட சிலர் நடனமாட உள்ளார்கள். ரன்வீர் சிங்கிற்கு பெரும் தொகை சம்பளமாகத் தர சம்மதித்த போதும், உடல்நிலை கருதி அவர் விலகிவிட்டார். தற்போது பரினிதி சோப்ராவும் விலகிவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.தமன்னாவிற்கு ஐபிஎல் துவக்க விழாவில் 10 நிமிடத்திற்கு நடனமாக சுமார் 50 லட்சம் வரையில் சம்பளம் பேசப்பபட்டுள்ளதாம். இரண்டு மாதம் விளையாட உள்ள சில வீரர்களுக்குக் கூட சம்பளத் தொகையாக குறைந்த பட்சம் 20 லட்சம் தான் நிர்ணயித்துள்ளார்கள். அதே சமயம் 10 நிமிடத்தில் 50 லட்ச ரூபாய் சம்பாதித்துவிடுவார் தமன்னா.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல் கிரிக்கெட்; 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்பை 88 ரன்னில் சுருட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அசத்தல் வெற்றி பெற்றது. #IPL2018 #KXIPvRCB
2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும், கடலூரில் தொல்.திருமாவளவன் பேட்டி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தமிழகத்தில் அல்லாது வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும் என்று கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.