கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி திரில் வெற்றி + "||" + One Day against england Indian women's team win the thrill

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி திரில் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி திரில் வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி திரில் வெற்றி பெற்றது.
நாக்பூர்,

உலக சாம்பியன் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. முதலாவது ஆட்டம் நாக்பூரில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 49.3 ஓவர்களில் 207 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பூனம் யாதவ் 4 விக்கெட்டுகளும், எக்தா பிஷ்ட் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 166 ரன்களுடன் எளிதில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. மந்தனா (86 ரன், 5 பவுண்டரி, 4 சிக்சர்) வெளியேறியதும் ஆட்டத்தின் போக்கு தலைகீழானது. 190 ரன்களை எட்டிய போது இந்திய அணி தனது 9-வது விக்கெட்டை பறிகொடுக்க, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதன் பிறகு எக்தா பிஷ்டும் (12 ரன்), பூனம் யாதவும் (7 ரன்) போராடி ஒரு வழியாக அணியை கரைசேர்த்தனர். இந்திய அணி 49.1 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 208 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. முன்னதாக, அதிக பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற வீராங்கனை என்ற சிறப்பை பெற்ற (192 ஆட்டம்) இந்திய கேப்டன் மிதாலி ராஜ் டக்-அவுட் ஆனார்.

2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் மீண்டும் பயங்கரம்: உணவகத்தில் 2 பேர் மீது நச்சுப்பொருள் தாக்குதல்
இங்கிலாந்து உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ரஷியர் உள்பட 2 பேர் மீது நச்சுப் பொருள் தாக்குதல் நடத்தப்பட்டது.
2. ஆசிய கோப்பை போட்டி; இலங்கை வெற்றி பெற 262 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 262 ரன்களை வங்காளதேசம் இலக்காக நிர்ணயித்துள்ளது.
3. ‘சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் திட்டம் இல்லை’ இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் பேட்டி
‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து உடனடியாக ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை’ என்று இங்கிலாந்து டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தார்.
4. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் நீடிப்பு இங்கிலாந்து அணி 4–வது இடத்துக்கு முன்னேற்றம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை இழந்தாலும் இந்திய அணி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறது. தொடரை வென்ற இங்கிலாந்து அணி 4–வது இடத்துக்கு முன்னேறியது.
5. கடைசி டெஸ்ட் போட்டி: டிராவிட்டிடம் பேசியது பதற்றத்தை தணித்தது - இந்திய வீரர் ஹனுமா விஹாரி
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பு டிராவிட்டிடம் பேசியது பதற்றத்தை தணித்தது என இந்திய வீரர் ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.