கிரிக்கெட்

ஐ.பி.எல். 2018 : முதலாவது டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி + "||" + IPL 2018: Chennai Super Kings win the first T20 match

ஐ.பி.எல். 2018 : முதலாவது டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

ஐ.பி.எல். 2018 : முதலாவது டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
மும்பை இந்தியன்ஸ்-க்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. #IPL2018
மும்பை,

மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். மும்பை அணியின் தொடக்க  வீரர்களான கேப்டன்  ரோகித் சா்மா 15 ரன்களிலும்,  எவின் லீவிஸ் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனா். மும்பை அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 40 ரன்களும், சூர்யகுமார் 43 ரன்களும் எடுத்தனர்.  சென்னை அணி சார்பில் வாட்சன் 2 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் மற்றும் இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.  முடிவில் மும்பை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்தது.


பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக பிராவோ 68(30) ரன்களும், கேதர் ஜாதவ் 24(22) ரன்களும் எடுத்தனர். முடிவில் சென்னை அணி 169 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.