ஐ.பி.எல். தொடக்க விழாவில் பிரபுதேவா, தமன்னா கலக்கல் நடனம்


ஐ.பி.எல். தொடக்க விழாவில் பிரபுதேவா, தமன்னா கலக்கல் நடனம்
x
தினத்தந்தி 7 April 2018 11:15 PM GMT (Updated: 7 April 2018 9:16 PM GMT)

ஐ.பி.எல். தொடக்க விழாவில் பிரபுதேவா, தமன்னா கலக்கல் நடனமாடினர்.

மும்பை,

8 அணிகள் இடையிலான 11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தமிழ் நடிகர் பிரபுதேவா, இந்தி நடிகர் வருண் தவானுடன் இணைந்து ‘முக்காலா’ பாடலுக்கு அட்டகாசமாக நடனம் ஆடினார். தமிழ் நடிகை தமன்னா, ‘பாகுபலி’ பாடலுடன் தொடங்கி பலகலவை அடங்கிய தொகுப்பு பாடலுக்கு, பின்னணி கலைஞர்கள் புடைசூழ நளினமாக நடனம் ஆடி ரசிகர்களை கிறங்கடித்தார். இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் நடனமும், மிகா சிங் பாடலும் அரங்கை அதிர வைத்தது.

இதற்கிடையே, 8 அணிகளின் கேப்டன்கள் உண்மையான உத்வேகத்துடன் ஆடுவதற்குரிய உறுதிமொழி எடுத்துக் கொண்ட காட்சி ஒளிபரப்பப்பட்டது. நடப்பு சாம்பியன் என்ற முறையில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா கோப்பையை விழா மேடைக்கு எடுத்து வந்தார். “அற்புதமான இந்த ரசிகர்களின் முன்னிலையில் மூன்று முறை கோப்பையை வென்று இருந்தோம். மீண்டும் அதை வெல்ல முயற்சிப்போம். ஆனால் அது எளிதான காரியம் அல்ல என்பதை அறிவோம்’ என்று ரோகித் சர்மா கூறினார். ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார்.

Next Story