கிரிக்கெட்

ஐ.பி.எல். 2018 : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகாக லோகேஷ் ராகுல் அதிவேக அரை சதம் + "||" + IPL 2018: Kings XI Punjab have been named as Lokesh Rahul's fastest half-century

ஐ.பி.எல். 2018 : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகாக லோகேஷ் ராகுல் அதிவேக அரை சதம்

ஐ.பி.எல். 2018 :   கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகாக லோகேஷ் ராகுல் அதிவேக அரை சதம்
11-வது ஐ.பி.எல் 2வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது . பின்னா் அதில் லோகேஷ் ராகுல் தன்னுடைய அதிவேக அரைசதத்தை பதிவு செய்துள்ளாா். #IPL2018
பஞ்சாப்,
 
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. பின்னா் இன்று இரண்டாவது போட்டி மொஹாலியில் அரங்கில் நடைப்பெற்று வருகிறது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின்   முதலில் பாவுலிங் தோ்வு செய்தார்.

இது ஐபிஎல் போட்டியில் கேப்டானகாக  தமிழ்நாட்டை சோ்ந்த வீரா்களில் ஒருவரான  ரவிச்சந்திரன் அஸ்வின்  முதல் முறையாக களம் கண்டுள்ளார்.  மேலும்,  இதன் மூலம் தன்னுடைய சிறப்பான தலைமை பண்பை காட்டுவதற்கு ஒரு வாய்பாக அமைந்துள்ளது. 

டெல்லி டேர்டெவில்ஸ் அணி  தன்னுடைய  முதல் ஆட்டத்தின் முடிவில்  கொடுக்கபட்ட 20 ஓவாின்  முடிவில் 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை கொடுத்துள்ளது. 

பின்னா்  167  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தற்போது களமிறங்கி விளையாடி வருகிறது.

இந்நிலையில், தொடக்க ஆட்டகாரா்களான  அகா்வால் 7(5) ரன்களில் வெளியேறினா். அதை தொடா்ந்து யுவராஜ் சிங் மற்றும் ராகுல் ஆகிய ஜோடிகள் களத்தில் விளையாடினா். அதில் லோகேஷ் ராகுல் 51(16) தன்னுடைய  அதிவேக அரைசதத்தை பதிவு செய்து வெளியேறினாா். 

இதை தொடா்ந்து யுவராஜ் சிங் 12(22) ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆகினார். பின்னா் டெவிட் மில்லா்டன் கருண்நாயா் இணைந்த  இருவரும் விளையாடி வருகின்றனா்.

தற்போது, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி  10  ஓவா்கள் முடிவில் 99 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...