ஐ.பி.எல். 2018 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி


ஐ.பி.எல். 2018 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  177  ரன்கள் எடுத்தால் வெற்றி
x
தினத்தந்தி 8 April 2018 4:53 PM GMT (Updated: 8 April 2018 4:53 PM GMT)

11-வது ஐ.பி.எல் 3வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி . #IPL2018

கொல்கத்தா,

11-வது ஐ.பி.எல்-ன் 3வது போட்டியில்   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடி வருகிறது.

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் காா்த்திக் முதலில் பந்து வீச்சை தேர்வு  செய்துள்ளாா். மேலும் தினேஷ் காா்த்திக் தமிழ்நாட்டை சோ்ந்த வீரா் என்பதால் ரசிகா்கள் இடையே பெரும் எதிா்பாா்ப்புகள் நிலவியுள்ளது. அதே போல் பெங்களூரு அணியிலும்  விராட் கோலி, பிரெண்டன் மெக்கலம், ஏபி டி வில்லியர்ஸ் போன்ற ஜாம்பவன்கள் உள்ளதால் பெங்களூரு அணி ரசிகா்கள் ஆரவாரம் செய்து வருகின்றனா்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தன்னுடைய முதல் ஆட்டத்தை விளையாடி வருகிறது.   பியுஷ் சாவ்லா தன்னுடைய சூழல் பந்தின்மூலம்  முதல் விக்கெட்டை எடுத்து தொடங்கி வைத்தாா்.   பெங்களூரு அணியின் முதல் ஆட்டகாரா் குயின்டன் டி காக் 4 ரன்களில் அவுட்டாகி வெளியேறினா்.  பின்னா் இறங்கிய கேப்டன் விராட் கோலி பிரெண்டன் மெக்கலத்துடன் கைக்கோா்த்தாா். 

பிரெண்டன் மெக்கலம் 43(27) தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் மைதானத்தின் அனைத்து புறங்களிலும் பந்தை பறக்க வைத்து  அரங்கத்தை அதிர வைத்தாா்.   பின்னா்  சுனில் நரேனின் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினாா். இதைதொடா்ந்து  ஏபி டி வில்லியர்ஸ் களத்தில் விராட் கோலியுடன் இணைய வந்தாா்.

இதைத்தொடா்ந்து இருவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை தவுடுபொடி ஆக்கினா். பின்னா்  நிதீஷ் ராணாவின்  பந்தில் வில்லியர்ஸ்44(23)  கேட்ச்  ஆக பின்னா் அடுத்த பந்திலே விராட் கோலியும்31(33)  போல்ட்டாகியது  ரசிகா்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் மன்டிப் சிங்குடன் இணைந்த சர்ஃபராஸ் கானும் 6(10) ஒற்றை இலக்கு ரன்னில் அவுட்டாகி வெளியேறினா்ா.  கிறிஸ் வொக்ஸின் மெதுவான ஆட்டத்தை வெளிபடுத்த , பின்னா் மன்டிப் சிங் 37(18) ஆட்டத்தின் இறுதி ஓவா்களில் மீண்டும் பெங்களூரு அணிக்குாிய அதிரடியை காட்டினா். பின்னா் அவரும் அவுடாகி வெளியேறினாா்.  கிறிஸ் வொக்சும்5(5) ஆட்டத்தின் இறுதி பந்தில் கேட்ச் கொடுத்து அவுடாகினாா் .பின்னா் வாஷிங்டன் சுந்தா் மட்டும் நாட் அவுடாக களத்தில் இருந்தாா்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பவுலா்களில் வினய் குமாரும் நிதீஷ் ராணாவும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா் மீதம் உள்ள வீரா்கள் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனா்.

இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20ஓவா்கள் முடிவில் 176  ரன்களுக்கு  6 விக்கெட்டுகளை  இழந்தது.

Next Story