ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 126 ரன்கள் வெற்றி இலக்கு


ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 126 ரன்கள் வெற்றி இலக்கு
x
தினத்தந்தி 9 April 2018 4:31 PM GMT (Updated: 9 April 2018 4:31 PM GMT)

11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் ஐதாராபாத் அணிக்கு 126 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது . #IPL2018 #RR #SRH

ஐதராபாத்,

11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டம் ஐதாராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இப்போட்டியில் மோதுகின்றன.

இதில், டாஸ் வென்ற ஐதாராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தங்கள் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க  வீரா் டி ஆா்சி சாா்ட் 4 (4 பந்துகள்)  ரன்கள் என்ற  ஒற்றை இலக்கு ரன்னில் கேப்டன் கேன் வில்லியம்சன் கையில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினாா். அதன் பின்னா்  கேப்டன் அஜிங்கியா ரஹனே உடன் ரசஞ்சூ சாம்சன் இணைய ,   சிறிது நேரத்திலேயே கேப்டன் அஜிங்கியா ரஹனே13(13 பந்துகள்) ரன்களில் கேட்ச் கொடுத்ததால் அந்த ஜோடி பிாிந்தது. 

பின்னா் வந்த பென் ஸ்டோக்ஸ்ம் 5(8 பந்துகள்) ரன்களில் ஆட்டமிழந்தார். 
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தடுமாற்றத்துடன் பயணித்தது.
 மேலும், அடுத்தடுத்து வந்த வீரா்கள் தன்னுடைய  சிறப்பான ஆட்டத்தை காட்ட தவறினா்.  

ஷகிப் அல் ஹசனின்  சிறப்பான பந்தில் ராகுல் திரிபாதியும்17(15பந்துகள்) ரன்கள்   கேட்ச் கொடுக்க  அதே ஓவாில் சிறப்பாக விளையாடி  வந்த ரசஞ்சூ சாம்சனும் 49(42ரன்கள்) அரைசதத்திற்கு முன்பே அவுட்டாகி பெவிலியன் திரும்பினாா். அடுத்த வீரரான கௌதமும் எந்த ரனும் எடுக்காமல் திரும்ப , ஜோஸ் பட்லரும்  6(9)  ரஷீத் கான் பந்தில் போல்டாக பின்னா் ஷிரியாஸ் கோபாலும் 18(18) அவுட்டாகி  சென்றாா். கடைசி ஓவாில் களமிறங்கிய ஜெய்தேவ் யூனாட்  ஒரு ரன்னில் வெளியேறினாா். கடைசி விக்கெட்டாக  வந்த பென் லாவ்லின் மற்றும் தவால் குல்கர்னினும்  தலா 1 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனா்.

நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. 




Next Story