கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி + "||" + IPL Highlights, SRH vs RR: Dhawan, Williamson Guide SRH To 9-Wicket Win Over RR

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. #IPL #SunRisersHyderabad
ஹைதராபாத்,

11 வது ஐபிஎல் போட்டியின் 4 வது ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே போட்டி இன்று ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்  நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஐதாராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தங்கள் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஐதராபாத் அணியினரின் சிறப்பான பந்து வீச்சால் ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. டார்சி ஷார்ட் (4 ரன்) ரன்-அவுட் ஆனார். ரஹானே (13 ரன்) சித்தார்த் கவுல் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

சஞ்சு சாம்சன் (49 ரன்கள், 42 பந்துகளில் 5 பவுண்டரியுடன்) மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். அவருடன் இணைந்த பென் ஸ்டோக்ஸ் (5 ரன்), ராகுல் திரிபாதி (17 ரன்) ஆகியோர் விரைவில் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த கிருஷ்ணப்பா கவுதம் ரன் எதுவும் எடுக்காமலும், ஜோஸ்பட்லர் 6 ரன்னிலும், ஸ்ரேயாஸ் கோபால் 18 ரன்னிலும், ஜெய்தேவ் உனட்கட் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. தவால் குல்கர்னி 3 ரன்னுடனும், பென் லாக்லின் 1 ரன்னுடனும் களத்தில் நின்றனர். ஐதராபாத் அணி தரப்பில் ஷகிப் அல்-ஹசன், சித்தார்த் கவுல் தலா 2 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், ரஷித்கான், பில்லி ஸ்டான்லேக் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா (5 ரன்), ஜெய்தேவ் உனட்கட் பந்து வீச்சில் பென் லாக்லினிடம் கேட்ச் கொடுத்து 2-வது ஓவரிலேயே நடையை கட்டினார்.


இதனை அடுத்து கேப்டன் கனே வில்லியம்சன், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை கடைசி வரை நிலைத்து நின்று அடித்து ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. 15.5 ஓவர்களில் ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷிகர் தவான் 77 ரன்னுடனும் (57 பந்துகளில் 13 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), கனே வில்லியம்சன் 36 ரன்னுடனும் (35 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஐதராபாத் அணி தனது சொந்த மண்ணில் வெற்றியுடன் போட்டி தொடரை தொடங்கி உள்ளது.

இந்நிலையில் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. 

ஆசிரியரின் தேர்வுகள்...