அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? ரசிகர்களுக்கு ஜி.வி பிரகாஷ் கேள்வி


அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? ரசிகர்களுக்கு ஜி.வி பிரகாஷ் கேள்வி
x
தினத்தந்தி 10 April 2018 6:23 AM GMT (Updated: 10 April 2018 6:23 AM GMT)

அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? என ஐபிஎல் ரசிகர்களுக்கு ஜி.வி பிரகாஷ் கேள்வி விடுத்து உள்ளார். #GVPrakash #IPL2018 #CauveryMangementBoard #CauveryIssue

சென்னை

காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது. மும்பையுடனான போட்டி முடிந்து சென்னை அணியினர் திரும்பிய நிலையில், கொல்கத்தா வீரர்களும் நேற்றுமாலை சென்னை வந்தடைந்தனர். வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீரர்கள் தங்குமிடத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  அந்த ஓட்டல்களுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் போட்டி நடைபெறும் மைதானத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 13 துணை ஆணையர்கள் தலைமையில் 2,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  கமாண்டோ படையின் ஒரு அணியும், ஆயுதப் படையைச் சேர்ந்த அதி தீவிர படையின் 4 குழுக்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என  காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து தமிழ் அமைப்புகளும், கட்சிகளும் ரசிகர்கள் ஐபிஎல் போட்டியை காண செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா? "  எனறு  நடிகர் ஜி.வி.பிரகாஷ் சமூக வலைத்தளத்தில் கருத்துப்பதிவு செய்து உள்ளார்.

அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? சுதந்திரமா உன் கருத்தை சொல்லமுடியலன்னா விளையாட்டை தவிர்க்க போறியா..??
தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க  சொல்லப்போறியா..? என டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார்.




Next Story