கிரிக்கெட்

சென்னையில் திட்டமிட்டப்படி அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறும் - ராஜீவ் சுக்லா + "||" + IPL matches will held in Chennai as per plan IPL Commissioner Rajeev Shukla

சென்னையில் திட்டமிட்டப்படி அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறும் - ராஜீவ் சுக்லா

சென்னையில் திட்டமிட்டப்படி அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறும் - ராஜீவ் சுக்லா
சென்னையில் திட்டமிட்டப்படி அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறிஉள்ளார். #RajeevShukla #IPL
புதுடெல்லி,

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையில் சென்னையில் ஐ.பி.எல். போட்டியை நடத்தவிட மாட்டோம் என அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சேப்பாக்கம் பகுதியில் போட்டியை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறுகிறது. தமிழக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டாலும், ஐபிஎல் போட்டிக்கு கூடுதலாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் கவுபாவை சந்தித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கோரிக்கை விடுத்து உள்ளார். 

“தமிழக அரசு மற்றும் சென்னை போலீஸ் பாதுகாப்பை அதிகரிப்பதாக உறுதியளித்து உள்ளது. உள்துறை செயலாளரை நான் சந்தித்து பேசினார். அவர் டிஜிபியிடம் பேசினார். ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என டிஜிபியிடம் கேட்டுக்கொண்டார். எந்தஒரு அசம்பாவித சம்பவங்களும் நடக்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்,” என ராஜீவ் சுக்லா பேசினார். 

இதற்கிடையே சென்னையில் திட்டமிட்டப்படி அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறிஉள்ளார். செய்தி சேனலுக்கு பேட்டியளித்த ராஜீவ் சுக்லா, “ஐபிஎல் போட்டிகளையும், காவிரி விவகாரத்தையும் இணைக்காதீர்கள். திட்டமிட்டப்படி சென்னையில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறும். அரசியலுக்கு அப்பாற்பட்டு கிரிக்கெட் போட்டி இருக்க வேண்டும்,” என “விவசாயிகள் பிரச்சனைக்காக ஐபிஎல் போட்டியை இலக்காக வைப்பது ஏன்?” என கேள்வியை எழுப்பி உள்ளார். 

ஆசிரியரின் தேர்வுகள்...