கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம் + "||" + Asian Cup cricket match: From India transition to UAE

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
மும்பை,

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இடையே தற்போது சீரான உறவு இல்லாததால், இந்தியாவில் போட்டியை நடத்த பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.


இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசிய கோப்பை போட்டியை இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றி இருக்கிறது. துபாய் மற்றும் அபுதாபியில் செப்டம்பர் 13-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறும். இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் ஜெயிக்கும் அணி என்று மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஓய்வு எடுத்தது ஏன்? - இந்திய கேப்டன் கோலி விளக்கம்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஓய்வு எடுத்தது ஏன் என இந்திய கேப்டன் கோலி விளக்கம் அளித்துள்ளார்.
2. ஆசிய கோப்பை கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி “சாம்பியன்”
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது. #INDvsBAN
3. ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இந்தியாவிற்கு 223 ரன்கள் வெற்றி இலக்கு
ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு 223 ரன்களை வங்காளதேசம் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.#AsiaCup
4. ஆசிய கோப்பை இறுதி போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு
ஆசிய கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது. #AsiaCup
5. ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வங்காளதேச அணி
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #PAKvsBAN