கிரிக்கெட்

ஐபிஎல் சென்னை டிக்கெட் விற்பனை ஒத்தி வைப்பு ; 4 நகரங்களில் ஏதாவது ஒன்றிற்கு மாற்றம் + "||" + omorrow ticket sales for the match between Chennai Super Kings and Rajasthan Royals on 20.04.18 has been postponed

ஐபிஎல் சென்னை டிக்கெட் விற்பனை ஒத்தி வைப்பு ; 4 நகரங்களில் ஏதாவது ஒன்றிற்கு மாற்றம்

ஐபிஎல் சென்னை டிக்கெட் விற்பனை ஒத்தி வைப்பு ;  4 நகரங்களில் ஏதாவது ஒன்றிற்கு மாற்றம்
ஐபிஎல் சென்னை டிக்கெட் விற்பனை ஒத்தி வைப்பு ; விசாகப்பட்டினம், ராஞ்சி, திருவனந்தபுரம், புனே ஏதாவது ஒன்றிற்கு மாற்றம் செய்யப்படுகிறது. #CauveryProtests #IPL2018
சென்னை

சென்னையில் ஏப்ரல் 20ஆம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் மற்ற இடங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இது குறித்து டெல்லியில் ஐபிஎல் நிர்வாகம் முக்கிய ஆலோசனை நடத்திவருகிறது என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வரும் ஏப்ரல் 20ஆம் தேதி சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பதில் பிற மாநில 4 மைதானங்கள் பரிசீலிக்கிறது என ஐபிஎல் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. விசாகப்பட்டினம், ராஞ்சி, திருவனந்தபுரம், புனே மைதானங்களை பிசிசிஐ பரிசீலனை செய்து வருகிறது.

சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம் செய்யப்படுமா என்ற அறிவிப்பு  நாளை வெளியாகும் என  ஐபிஎல் வட்டாரம் தகவல் தெரிவித்து உள்ளது.