கிரிக்கெட்

உங்கள் மீது அன்பும் பாசமும் இன்னும் நிறைந்துள்ளது: ரவீந்திர ஜடேஜா டுவிட் + "||" + Still we have a lots of love and care for our csk fans: says jadeja

உங்கள் மீது அன்பும் பாசமும் இன்னும் நிறைந்துள்ளது: ரவீந்திர ஜடேஜா டுவிட்

உங்கள் மீது அன்பும் பாசமும் இன்னும் நிறைந்துள்ளது: ரவீந்திர ஜடேஜா டுவிட்
உங்கள் மீது அன்பும் பாசமும் இன்னும் நிறைந்துள்ளது என்று சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். #Csk #Ipl
சென்னை, 

காவிரி பிரச்சினைக்காக போராட்டங்கள் நடந்து வரும் சூழ்நிலையில் ஐபிஎல் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று சென்னை கிரிக்கெட் ஸ்டேடியத்தை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று திட்டமிட்ட படி சென்னை சூப்பர்கிங்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது.

இப்போட்டிக்கு நடுவில் மைதானத்திற்குள் காலணியை ரசிகர்கள் மாடத்தில் இருந்தவர்கள் வீசினர். ஆடுகளத்துக்கு உள்ளே விழுந்த காலணியை எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த சென்னை வீரர் ஜடேஜா அப்புறப்படுத்தினார். இதனால், போட்டியில் சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும், எந்த இடர்பாடும் இன்றி நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த நிலையில், ரவீந்தர ஜடேஜா தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “ எங்கள் சென்னை அணி ரசிகர்கள் மீது இன்னும் அன்பும் பாசமும் கொண்டுள்ளோம்” என்று தெரிவித்து உள்ளார். இந்த பதிவோடு, ஆடுகளத்திற்குள் விழுந்த காலணியை ஜடேஜா மற்றும் டுபிளஸிஸ் அப்புறப்படுத்தும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.