கிரிக்கெட்

பாதுகாப்பு அளிக்கமுடியாது - சென்னை போலீஸ்; ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது + "||" + Chennai Police informed CSK that they won t be able provide adequate security Rajeev Shukla

பாதுகாப்பு அளிக்கமுடியாது - சென்னை போலீஸ்; ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது

பாதுகாப்பு அளிக்கமுடியாது - சென்னை போலீஸ்; ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது
சென்னை போலீஸ் பாதுகாப்பு அளிக்கமுடியாது என கூறியதும் ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது. #IPL2018 #CSK #RajeevShukla


புதுடெல்லி,


சென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் ஐ.பி.எல். போட்டிகளை அனுமதிக்கமாட்டோம் என போராட்டம் நடைபெற்றது. இதனால் மைதானம் அமைந்து உள்ள சேப்பாக்கம் பகுதியில் நேற்று மோசமான நிலை ஏற்பட்டது. போராட்டம் நடத்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதற்கிடையே சென்னையில் மேற்கொண்டு 6 போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் நடைபெற உள்ள போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக பிசிசிஐ தரப்பு தகவல்கள் வெளியாகியது. சென்னையில் நடைபெற இருந்த போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற 4 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகி வினோத் ராய் பேசுகையில், சென்னையில் நடைபெற இருந்த போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற ஆலோசித்து வருகிறோம். விசாகப்பட்டணம், திருவனந்தபுரம், புனே மற்றும் ராஜ்கோர்ட் நகரங்கள் இதற்காக தயாராக இருக்கிறது என குறிப்பிட்டார். இவ்வரிசையில் விசாகப்பட்டணம் முதலிடம் பெறுகிறது.

இந்நிலையில் சென்னை போலீஸ் பாதுகாப்பு அளிக்கமுடியாது என கூறியதும் ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா பேசுகையில், “தமிழக காவல்துறை முழு பாதுகாப்பு அளிப்போம் என உத்தரவாதம் அளித்ததும் நாங்கள் திட்டமிட்டப்படி சென்னையில் அனைத்து போட்டிகளையும் நடத்த முயற்சி செய்தோம். ஆனால் இன்று சென்னை காவல்துறை அவர்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது என சென்னை அணியிடம் தெரிவித்துவிட்டது. அதனால் விளையாட்டுப்போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது. எங்களுடைய தேர்வில் புனே மைதானமும் உள்ளது,” என கூறிஉள்ளார். தொடர்புடைய செய்திகள்

1. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1 லட்சம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன : மின்வாரியம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1 லட்சம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.
2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவு
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.6.64 குறைந்துள்ளது.
3. கஜா புயல் முழுமையாக கரையை கடந்தது : வானிலை ஆய்வு மையம்
கஜா புயல் முழுமையாக கரையை கடந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. சேலம்-சென்னை ரெயிலில் திருடிய பணத்தை எடுத்து சென்றது எப்படி? கொள்ளை கும்பல் தலைவன் பரபரப்பு வாக்குமூலம்
சேலம்-சென்னை ரெயிலில் திருடிய பணத்தை எப்படி எடுத்து சென்றோம்? என்பது குறித்து கொள்ளை கும்பல் தலைவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.