கிரிக்கெட்

ராஜஸ்தான்– டெல்லி ஆட்டம் மழையால் பாதிப்பு + "||" + Rajasthan, Delhi match Damage to rain

ராஜஸ்தான்– டெல்லி ஆட்டம் மழையால் பாதிப்பு

ராஜஸ்தான்– டெல்லி ஆட்டம் மழையால் பாதிப்பு
8 அணிகள் இடையிலான 11–வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த 6–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்சை சந்தித்தது. டெல்லி அணியில் இரு மாற்றமாக டேனியல் கிறிஸ்டியன், அமித் மிஸ்ரா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மேக்ஸ்வெல், ‌ஷபாஸ் நதீம் இடம் பிடித்தனர்.டாஸ்

ஜெய்ப்பூர், 

8 அணிகள் இடையிலான 11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்சை சந்தித்தது. டெல்லி அணியில் இரு மாற்றமாக டேனியல் கிறிஸ்டியன், அமித் மிஸ்ரா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மேக்ஸ்வெல், ஷபாஸ் நதீம் இடம் பிடித்தனர்.

டாஸ் ஜெயித்த டெல்லி கேப்டன் கம்பீர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணிக்கு 2-வது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் டார்சி ஷார்ட்டை (6 ரன்), டெல்லி வீரரான தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் துல்லியமாக ரன்-அவுட் ஆக்கினார்.

இதன் பின்னர் சீரான இடைவெளியில் ராஜஸ்தான் அணிக்கு விக்கெட்டுகள் விழுந்தன. பென் ஸ்டோக்ஸ் 16 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 37 ரன்களிலும், கேப்டன் ரஹானே 45 ரன்களிலும் (40 பந்து, 5 பவுண்டரி), விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 29 ரன்களிலும் வெளியேறினர்.

ராஜஸ்தான் அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் 2 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது.