கிரிக்கெட்

டோனியை போல் களத்தில் யாரும் பொறுமையாக செயல்பட முடியாதுசென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பில்லிங்ஸ் பேட்டி + "||" + On the field like Doni No one can work patiently

டோனியை போல் களத்தில் யாரும் பொறுமையாக செயல்பட முடியாதுசென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பில்லிங்ஸ் பேட்டி

டோனியை போல் களத்தில் யாரும் பொறுமையாக செயல்பட முடியாதுசென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பில்லிங்ஸ் பேட்டி
களத்தில் டோனியை போல் யாரும் பொறுமையாக செயல்பட முடியாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ‘ஹீரோ’ பில்லிங்ஸ் கூறினார்.
சென்னை, 

களத்தில் டோனியை போல் யாரும் பொறுமையாக செயல்பட முடியாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ‘ஹீரோ’ பில்லிங்ஸ் கூறினார்.

சென்னை அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு சென்னை சேப்பாக்கத்தில் அரங்கேறிய பரபரப்பான 5-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி ஆந்த்ரே ரஸ்செலின் (88 ரன், 36 பந்து, ஒரு பவுண்டரி, 11 சிக்சர்) அதிரடியின் துணையுடன் 6 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து சுடச்சுட பதிலடி கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஷேன் வாட்சன் (42 ரன், 3 பவுண்டரி, 3 சிக்சர்), சாம் பில்லிங்ஸ் (56 ரன், 23 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) ஆகியோரின் வாணவேடிக்கையால் வெற்றிப்பாதையில் பயணித்தது. கடைசி 2 பந்தில் வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்ட போது, ரவீந்திர ஜடேஜா சிக்சர் அடித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த ஆட்டத்தில் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 31 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. இதன் மூலம் ஒரு ஆட்டத்தில் நொறுக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கை (கடந்த ஆண்டு டெல்லி-குஜராத் லயன்ஸ் ஆட்டத்திலும் 31 சிக்சர்) சமன் ஆனது.

பில்லிங்ஸ் பேட்டி

அரைசதம் விளாசிய 26 வயதான சாம் பில்லிங்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இங்கிலாந்தை சேர்ந்த பில்லிங்ஸ் ரூ.1 கோடிக்கு சென்னை அணிக்கு வாங்கப்பட்டார். சாம் பில்லிங்ஸ் கூறியதாவது:-

சுரேஷ் ரெய்னா, டோனி, ஹர்பஜன்சிங் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து விளையாடியது மகிழ்ச்சி அளித்தது. இவர்களுடன் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சியும் அங்கம் வகிக்கிறார். இவர்களிடம் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு கற்றுக்கொள்வேன். மிடில் வரிசையில் ரெய்னா, டோனி, ஜடேஜா போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். அதனால் எந்த இலக்கையும் எங்கள் அணியால் விரட்டிப்பிடிக்க முடியும் என்பதை அறிவோம்.

பொறுமைசாலி

டோனி, பதற்றமின்றி பொறுமையாக செயல்படுகிறார். களத்தில் இது போன்று ரொம்ப நிதானமாக வேறு எந்த வீரராலும் இருக்க முடியாது. அவரிடம் காணப்படும் இத்தகைய அசாத்திய குணத்தை யாரும் தங்களுக்குள் எடுத்துக்கொண்டு வந்து விட முடியாது. ஆனால் இந்த ஆட்டத்தில் எங்களுக்குள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது.

இருவரும் இணைந்து ஆடிய போது டோனி (25 ரன்) என்னிடம் அதிகமாக எதுவும் பேசவில்லை. ஆனால் பந்தை விரயமாக்காமல் தொடர்ந்து ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் ஓடி எடுக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார். அதிவேகமாக ஓடி ரன் எடுக்கும் திறன் டோனியிடம் இருக்கிறது.

சென்னை ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய போதே அதை பார்க்க 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர். ரசிகர்களின் ஆர்வம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையே இது உணர்த்தியது.

இவ்வாறு சாம் பில்லிங்ஸ் கூறினார்.