கிரிக்கெட்

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா மிதாலிராஜ் புதிய சாதனை + "||" + Women's One Day Cricket: India defeated England to win the series

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா மிதாலிராஜ் புதிய சாதனை

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா மிதாலிராஜ் புதிய சாதனை
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று நடந்தது.

நாக்பூர், 

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. விக்கெட் கீப்பர் மை ஜோன்ஸ் (94 ரன்), கேப்டன் ஹீதர் நைட் (36 ரன்) தவிர வேறு யாரும் அந்த அணியில் சோபிக்கவில்லை.

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 45.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 202 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணியில் மந்தனா (53 ரன்), ஆட்டம் இழக்காமல் கேப்டன் மிதாலிராஜ் (74 ரன், 124 பந்து, 9 பவுண்டரி) தீப்தி ‌ஷர்மா (54 ரன், நாட்–அவுட்) அரைசதம் அடித்தனர். மிதாலிராஜ் ஒரு இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 56–வது முறையாகும். இதன் மூலம் பெண்கள் ஒரு நாள் போட்டி வரலாற்றில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்சின் (55 முறை) சாதனையை முறியடித்தார்.தொடர்புடைய செய்திகள்

1. கடைசி ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா பிளிஸ்சிஸ், மில்லர் சதம் அடித்து சாதனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
2. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி 2–வது வெற்றி பாகிஸ்தானை வீழ்த்தியது
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2–வது வெற்றியை பெற்றது.
3. தலையை தாக்கிய பவுன்சரால் நிலைகுலைந்த இமாம் உல் ஹக்
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், பேட்டிங் செய்யும் போது பவுன்சர் பந்து தாக்கியதில், பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் காயம் அடைந்தார்.
4. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணி படுதோல்வி ஏமாற்றத்துடன் விடைபெற்றார், ஹெராத்
காலேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
5. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணிக்கு 462 ரன்கள் இலக்கு
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 462 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.