தமிழக அரசு, மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு ஐ.பி.எல். இடம் மாற்றத்தால் ரூ.7.8 கோடி வருவாய் இழப்பு


தமிழக அரசு, மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு ஐ.பி.எல். இடம் மாற்றத்தால் ரூ.7.8 கோடி வருவாய் இழப்பு
x
தினத்தந்தி 12 April 2018 8:54 PM GMT (Updated: 12 April 2018 8:54 PM GMT)

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 7 ஆட்டங்கள் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டது. இதில் ஒரு ஆட்டம் மட்டுமே நடந்த நிலையில், போராட்டம் காரணமாக எஞ்சிய 6 ஆட்டங்களும் புனேக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.இ

சென்னை, 

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 7 ஆட்டங்கள் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டது. இதில் ஒரு ஆட்டம் மட்டுமே நடந்த நிலையில், போராட்டம் காரணமாக எஞ்சிய 6 ஆட்டங்களும் புனேக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் தமிழக அரசுக்கும், மாநில கிரிக்கெட் சங்கத்துக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது டிக்கெட் கட்டணத்துக்கான கேளிக்கை வரி, ஜி.எஸ்.டி. வரி மூலம் ஒரு ஐ.பி.எல். ஆட்டத்திற்கு தமிழக அரசுக்கு ரூ.80 லட்சத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வழங்குகிறது. இதே போல் ஒரு ஆட்டத்திற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் வருவாய் கிடைக்கும்.

தற்போது 6 ஆட்டங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டதால் தமிழக அரசுக்கு ரூ.4.8 கோடி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு ரூ.3 கோடி என்று மொத்தம் ரூ.7.8 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story