கிரிக்கெட்

4 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி: கேப்டன் டோனி பேட்டி + "||" + The Chennai team lost by 4 runs

4 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி: கேப்டன் டோனி பேட்டி

4 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி: கேப்டன் டோனி பேட்டி
சென்னை அணி தோல்வி: கேப்டன் டோனி பேட்டி
மொகாலி, 

‘பஞ்சாப் அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது’ என்று 4 ரன் வித்தியாசத்தில் அந்த அணியிடம் தோல்வி கண்ட பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி தெரிவித்தார்.

தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பஞ்சாப் அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. முஜீப் ரகுமான் நன்றாக பந்து வீசி ரன்னை கட்டுப்படுத்தினார். 2-வது பாதியில் பனியின் தாக்கம் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தபடி பனியின் தாக்கம் அதிகமில்லை. கிறிஸ் கெய்லின் பேட்டிங்கும், முஜீப் ரகுமானின் பந்து வீச்சும் ஆட்டத்தை எதிரணிக்கு சாதகமாக்கியது. இந்த ஆட்டத்தில் போட்டி நெருக்கமாக இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பவுண்டரி கொடுப்பதை தவிர்ப்பது எப்படி?, மோசமான பந்து வீச்சை தவிர்ப்பது எப்படி? போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். எல்லா ஆட்டங்களிலும் போட்டி நெருக்கமாகவே இருந்தது. எனவே எல்லா வீரர்களும் தனிப்பட்ட முறையில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஒட்டுமொத்தத்தில் நாங்கள் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும்.

ரவீந்திர ஜடேஜா மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இடக்கை பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா ஆடாததால் மற்றொரு இடக்கை பேட்ஸ்மேனான ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் தனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு அளிக்க இது சரியான தருணமாகும். அவர் நல்ல நிலைக்கு திரும்புவார் என்று நம்பிக்கை இருக்கிறது. எனக்கு முதுகுபகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும் கடவுள் எனக்கு நிறைய சக்தி கொடுத்து இருக்கிறார். நான் எனது முதுகுபகுதியை அதிகம் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. எனது கைகள் பணியை செய்யும். என்னுடைய காயம் மோசமானது கிடையாது. காயம் நேர்ந்தது எப்படி என்பது எனக்கு தெரியும். எனவே காயத்தின் தன்மையையும் என்னால் அறிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...